அகதி

July 19, 2008

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்

Filed under: Uncategorized

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்

 

 

மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது

விசுவாசமாக இருக்கும் நான்

எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்

சத்தியத்தைத் தரிசித்து,

என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை

உலகுக்கு ஒப்புவிக்கிறேன்
:

 

ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.

 

என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மா தேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை-ஈழம் எனது தாயகம்!

 

 

நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்?இந்தாண்டு விடுமுறையானது பியர் போத்தலோடு போகிறது.பொழுதுபோக்குத் தோட்டத்தில் அமர்ந்துள்ள நான் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் வாழ முற்படுவதுகூட ஒரு விசித்திரமான உணர்வினாற்றாம்.தேசம்-தாயகம்.உயிரினுள் உறங்கும் ஏதொவொரு வலி மேலெழுகிறது.நாடற்றவனின் குறிப்புகள் எனது வலியையும் தனக்குள் இணைத்துவிடுவதால் அது பொதுவானவொரு தளத்தில் நமது குறிப்புகளாகிறது.

 

கடனில் மூழ்கித் தொலையும் பொழுது. சும்மா தருவதுபோன்று பணம் தந்த சிட்டி பாங்(நாளை இன்னொரு பெயரோடு என்னைக் கொல்லும் இந்த வங்கி.பிரான்சின் பகாசூரக்(;(Crédit Mutuel)கடனளிக்கும் வங்கி சிற்றி பாங்கை இன்று வேண்டுகிறது.) என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறு கவிதைகளோடு-கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.

 

"
நகரம் பிதுக்கித் தள்ளுகிறது

தனக்கான அவதிகளினு}டு

என்னையும்

 

ஒரு செர்ரிப் பூ

உதிர்ந்து

நிலத்தை வந்தடைவதற்குள்

மலைபோல குவிகின்றன

கட்டவேண்டிய கடன் பில்கள்
…"

 

மார்பு தட்டும் மண்டையும்,தானென்ற அகங்காரமும் நிறைந்த மனிர்களை நாம் தமிழகத்துச் சின்னத்திரைகளில் அனுபவிக்கின்றோம்.ஓரத்தில் மிக நொந்துகொள்ளும் ஆணவத்து அதிகாரத்தால் மனதுடையுந்தருணங்கள் பல.இங்கே, மனிதர்கள் நிசத்தை மறைத்துக்கொண்டு கோடிகளில் வாழும் தருணத்தில் நாம் கடன்களோடு வாழுகின்ற உண்மை முகத்துள் ஒரு அதிசயமான வாழ்வாதாரத்தைக் கனவுக்குள் உள்வாங்குகிறோம்.பணம் மட்டும் போதுமாக இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும்.

 

நினைத்தவுடன் எதனையும் ஆட்கொள்ள அதுதானே அவசியமானது?

 

இதனாற்றான் வள்ளுவனும்"பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை"என்றான் போல்.

 

"
நகரம் ஏற்றுக் கொள்வதில்லை

வீடற்றவர்களை மட்டுமின்றி

மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்
…"

 

 

எனது சுயம் நெஞ்சில் ஈரத்தோடு,தனது தேசத்தையும்,குடும்பத்தையும் தாங்கிக் கனவோடு எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.வானம் முட்டும் ஈரமனம் தோன்றிக்கொண்டே உலகத்தின் வலியைத் தனதாக்கித், தான் மட்டும் அதிகாரத்திலிருந்தால் இந்தக் கொடுமை எனக்கு- "இவர்களுக்கு"நிகழாதென்கிறது மனம்.என்னை தூக்கி இந்த உலகத்தின் விளிம்பில் வைத்துக் கொள்கிறேன்.இப்போது நான் விளிம்பு மனிதானாகிவிட்டேன்.எனக்குள் வலிகளும்-வேதனைகளும் உங்களைப் போலவேதாம் உண்டு.இதனால்தாம் நான் பொதுவாக இருக்கிறேன் என்ற உணர்வோடு வருகிறேன்.மிகச் சமீபத்து நடாத்தைகள் என்னனுள் பாரிய தாக்கத்தைச் செய்திருக்கிறது.இதனால் எனது மனதில் ஈரம் அதிகமாகிறது.ஏனெனில், நான் தேசம் தொலைத்தவன்.அந்த வலிகள் நம்மை அடிமைகொண்ட முறைமைகளோடு தினமும் ஒரு கனவுக்காலத்தை நமக்குள் தோற்றிக் கொள்ளும்போதெல்லாம் நெஞ்சில் ஈரலிப்பான கனிவும் மற்றவர்களை மனிதர்களாக உணரும் ஒரு தியான நிலையை எனக்குள்ளும் இந்த டி.ஜே.க்குள்ளும் தோற்றிவித்துள்ளது.நாம் மனிதர்கள்.

 

 

நகர்ப்புறத்து வாழ்வியல் மதிப்பீடுகளால் தகர்ந்துபோகும் மனிதம் மற்றுமொரு புறமாக மகத்துவத்துக்கான தேர்வை செய்கிறது.இந்தத் தேர்வு தேவாலயங்களில் செபஞ் சொல்வதிலிருந்து தன்னை மீடெடுக்க முனைவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது-பக்கத்தில் மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படும்போது.

 

ஆம்!தேசத்தைத் தொலைத்தவர்களில் பலர் தமது இருப்புக்கு எதிரான பலவிதமான விளைவுகளை எதிர் கொள்வதில்"தீயினால்"சுடுதலும் ஒன்று.நகரங்கள் இனவாதத்தைத் தள்ளிக்கொண்டே மனித நேயம் பற்றிய புதுக்கவிதையும் பாடுகிறது.அத்தகைய தருணத்தில் நெஞ்சில் ஈரலிப்போடு இருக்கும் விளிம்பு மனிதர்கள் வாழ்வுக்கான தேடலோடு பாதுகாப்புத்தேடி நகரத்தை அண்மிக்கும்போது அங்கே உதிரி மானுட வாழ்வு அவர்களை-எம்மை எட்டிப்பார்கிறது.நாம் உயிர்வாழ்வதற்காக உழைத்து உருக்குலைகிறோம்.

 

"
நீயொரு

மரம் நட முயல்கின்றாய்

எனக்குள்
…"

 

 

இது இலகுவானது இல்லை.நான்-நாம் சலனப்பட்டவாழ்விலிருந்து என்னை-எம்மை மீட்பதற்காக எத்தனையோ தவங்களில் உலாவருகிறோம் இ.ல்லையா?

 

 

இதிலொன்று ஓடாய் உழைத்துச் சாவதில் நான், என்னைப் புனரமைக்கிறேன்.இங்கே, எனது மனதும் வெறும் புல் பூண்டே முளைக்க முடியாத தரிசு நிலத்தைப்போல் காய்ந்து வெந்துலர்ந்து விடுகிறதே!இங்கே இன்னொரு பசுமையை நீ வரவழைப்பதற்காக மரம் நாட்டுவது தகுமா?

 

"
தரிசாகிக் கொண்டிருக்கும் மனிதில்

அவ்வளவு இலகுவல்ல

தளிரொன்று அரும்புவது
."

 

 

நடப்பில்லுள்ள ஒழுங்கின்மீது கைகளை நீட்டிக்குற்றுஞ் சொல்லும் மொழியைத் தகர்த்துவிட்டு குறியீடுகளால் சுட்டப்படும் இந்த மொழிக்குச் சொந்தக்காரன் "நாடற்றவனின் குறிப்புகள்"சொன்ன இளங்கோ.மிகவும் கவனத்தோடு வாசிக்கப்பட வேண்டிய உணர்வுகளை எழுத்தில் வடித்துவைத்துவிட்டு ஓரத்தில் ஒதுங்கிவிடும் புதிய கவிதை மரபுக்கு இளங்கோவும் சொந்தக்காரனாக இருப்பது ஆச்சரியமானது.புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வாழ்வின் அனைத்துச் சங்கதிகளையும் மிக இலகுவாக அனுபவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் இளைஞனிடம் அடி நாதமாக மனிதம் இழையோடுவது மிக ஆச்சரியமானதாகும்.இந்த ஆச்சரியமான உந்துதலுக்கு ஈழத்துப் போரின் மிக யதார்த்தமான தாக்கம் உந்து சக்தியாகும்.

 

தன்னையும்,தான்சார்ந்த புறவுலகத்தையும் மனித முகத்தோடு தரிசிக்கும் எழுத்துக்கள் நமது சமுதாயத்தில் அருகி வரும்போது இன்றைய நாடற்றவனின் குறிப்புகள் இதை உடைத்து இதோ எனது வாழ்வு உன்னையும்,என்னையும் இணைத்ததே என்று தனது இருப்பை எனக்குள் பிரதியிடுகிறது.இது,அபாரமான மனிதத்தொடுதலே!

 

இளங்கோவின் உணர்வு வரிகள் மிகம் மனிதத்தோடும் மனித உந்துதலோடு மிடுக்காகப் பயணிப்பவை.இவரது தொகுப்புள் உள்ள பல்வேறு உணர்வு நறுக்குகள் மிகவும் மனிதவிருப்புகளோடு நம் முன் எழுந்து நடைபயில்பவை.நாம் ஒன்றித்தே செல்வதற்குத் தயாராகும் வாழ்வின் விருப்போடு மிகவும் நெருங்கி நம்மீது பரிவாகவும் பழக முற்படுபவை.தோளில் கரம்பதித்துக்கொண்டே மிக நெருக்கமாக நமது அந்தரங்கத்தை நம் கண்முன் கொணர்ந்து நம்மை எச்சரித்துவிட்டுச் செல்லும் பற்பல மனிதத் தெறித்தல்களை நாடற்றவனின் குறிப்புக்கள் நாம் இனம் காணமுடியும்.

 

"
குழந்தைகள்

காணாமற் போகின்றார்கள்

கடத்தப்படுகின்றார்கள்

காவும் கொள்ளப்படுகின்றார்கள்
."

 

வரிகள் மெல்லியவை.ஆனால், இவற்றுக்குள் உள்ள வலி மிக வலியது.இன்றைய இளையவரின் வாழ்வைச் சிதிலமாக்கும் பொருளுலகத்தில் நாமும் சிறார்களாய் இருந்தோம்.நமது மழலைகளும் அவ்வண்ணமே இருக்கிறார்கள்.எங்கள் வாழ்வில் தரிசித்திருக்கக்கூடிய உலகை இன்றைய சிறார்கள் தரிசித்திருக்க வாய்ப்பில்லை.சிறார் பருவம் திருடப்படுகிறது.ஒருபுறம் கல்விக்காக மறுபுறம் போருக்காக-நாட்டிற்காக.குடும்பங்கள்-பாடசாலைகள் குழுந்தைப் பருவத்தைக் கொன்று குவித்துவிட்ட வெறும் ஜந்திரங்களை உருவாக்கத், தேசமோ தனது விடிவுக்காகச் சிறார்களைப் போரில் இறக்கிக் கொன்று தள்ளுகிறது.இரண்டும் ஒரிடத்தில் சேரும்போது நிகழ்வு ஒன்றேதாம்.

 

"87
களில்

கொடுமிருளாய்த் துரத்திய

சம்பங்களில்

எனது பிராத்தனை

என்றுமே வளர்ந்துவிடக் கூடாது

என்பதாய் இருந்தது

 

இன்றும்

எத்தனை குழந்தைகள்

பாயில் மூத்திரம் பெய்தபடி

இரவுகளை வெறித்துப் பார்க்கின்றனவோ
…?"

 

 

மனிதவிருத்தி,மனிதவிருத்தி என்று கூறுகிறோமே அது என்ன?

 

மனித இருத்தல் வெகுவாகப் பொருள் நலனோடு பிணைக்கப்பட்டபின் அந்த இருத்தலை உறுதிப்படுத்துவது அல்ல சிதைப்பது இன்னொரு சக்தியினால் என்றாகிறது.நான் நாளை உயிரோடு இருப்பதும்,இல்லாதிருப்பதும் நிலவும் அதிகாரத்தினாற் தீர்மானிக்கப்படும்போது எனக்குள் நிலவும் சுதந்திரம் மாயைகிறது.எனது சுயத்தில் எங்கோவொரு வெளியில் உயிர்த்திருத்தல் என்ற ஏக்கம் ஒட்டிக்கொள்கிறது.நான் கனவுகாணும் பட்டாம் பூச்சி உலகம் என்னிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.அத்தகைய உலகத்தைப் போரினால் கருக்கியபடி நான் இன்னொரு உலகுக்குள் திணிக்கப்படுகிறேன்.அங்கே,நான் மகத்துவமான ஒரு உலகத்தின் கதா நாயகனாக வர்ணிக்கப்பட்ட இன்னொரு உலகம் ஜந்திரத்தனமான எனக்குள் பிணைக்கப்படுகிறது.இது கொடூரமான உளவியல் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பினும் பொது மனிதக் கதையாடலில் எனக்குள் இன்னொரு உலகம் கட்டியமைக்கப்படுகிறது.

 

 

 

(2)

 

 

விளாமரத்துக் காய்களுக்காய்க்

கல்லடித்த பள்ளி வாழ்வு

மாதாகோயில் படிக்கட்டில் தொலைந்தது தோழமை

தூரத்துக்கு வந்தபின்

தொலைந்தான் சன்னதி தோளோடு நிமிர்ந்து
!

 

கூடித் திரிந்து,குளம்கண்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து நீராடிய பொழுதெல்லாம் தொலைந்திருக்கு.இன்றோ சிறுபகுதி சிறாரிடம் கேம் போயும்,நெற்றோன்டோ டி.எஸ்.சும் மகிமை பெற்றுவிட்டபோது,இந்தப் புவிப்பரப்பில் பெரும் பகுதி மழலைகள் தம்மைத் தொலைத்து உலக விளையாட்டு வீரர்களுக்காக உடை,பாதணி பின்னுகிறார்கள்.தான் பிறந்த குடும்பத்தின் ஒரு நேரக்கஞ்சிக்கு உழைக்கும் மழலை அதே கதியில் தேசத்துக்காகவென்ற கோதாவில் சிறார் இராணுவமாக்கப்பட்டு பலிக்கடாவாக ஆயுதம் தரித்திருக்க,"எழுதி முடிக்கும்

ஒவ்வொரு வாக்கியத்திலும்

தெறித்திருக்கிறது துயரம்…"

எதைப்பற்றிச் சிந்தித்திருப்பினும்,நாடற்றவர்களின் வாழ்வுக்குள் நிலுவுகின்ற வலியிருக்கிறதே-அது சொல்லி மாளாதது!மழைபொழியலாம்,பறவைகள் பேசலாம்.பாடும் மீன்களும் துள்ளிக்குதிக்கலாம்.ஆனால்,நமது மனம்மட்டும் மெளனத்தால் வருடப்பட்ட வலியைத் தினம் மறப்பதற்காய் இவற்றை இரசிப்பதாகச் சாட்டை செய்யும்.எமது வலிகள் எம்மைத் தினம் பதம்பார்த்திருக்கத் தேசத்தில் எமது சிறார்கள் எவருக்காகவோ-எதுக்காகவோ செத்துமடிகிறார்கள்.இங்கே, இளங்கோவின் கவிதை மனம்மட்டும் எல்லாவகை மெளனத்தையும் மிக நுணுக்கமாக உடைத்துவிட்டு,மரணசாசனம் எழுதப்பட்ட உலகப்பரப்பில் மடிந்துவிடும் சிறார்களைக் காணுவதற்காக-காப்பதற்காகத் தனது உணர்வுகளோடு உறக்கமற்று இருக்கிறது.இந்த மனதின் பிழிவு இயற்கையின் பொழிவோடு உறவாடும் புவிப்பரப்பை நனைத்துவிடும் குருதியாக இனம் காணுகிறது.ஆம்!இன்று மழை பொழிகிறதோ இல்லையோ தினமும் சிறார்கள் குருதி சிந்துகிறார்கள்.அது,தேசத்துக்காகவோ அல்லது தெருவில் படுத்துறங்கும்போது மேட்டுக்குடி வாகனத்தின் சில்லுகளின் திமிர்த்தனத்துக்கோ அல்லது அன்னையின் வயிற்றை நிரப்புவதற்காகவோ குழந்தைகள் குருதி சிந்திக்கொண்டே சாகிறார்கள்.மிக யதார்த்தமாகச் சொல்லுகின்ற இந்த மொழி, கவிதைக்கான புதியவொரு தெரிவைக் கொண்டியங்குகிறது.அது குழந்தைகளின் அழிவை ஒப்புவமைக்குட்படுத்தும்போதே அவர்கள் வாழும் வாழ்விட நிலப்பரப்பை அவர்களது குருதியே கரைப்பதாகச் சொல்லிக் குமுறுகிறது.இது,ஒருவகையில் புதியதொரு அத்தியாயத்தை நமக்குள் திறந்துவிடுகிறது.நாம் தரிசிக்கவேண்டிய மனிதம் குறித்து சொல்லிவிடும் மிக நேர்த்தியான அழகை கீழ்வரும் உணர்வு நறுக்கின் வீச்சில் பொலிந்து மேவுவதைத்தாம் மனிதத்தொடுதல் என்பது.இளங்கோவிடம் காணும் கவிதைக் கருக்களெல்லாம் மிக ஆழமாக நாம் உணரும் மனிதத்தைக் குறித்த தெரிவுகள்(பொதுப்புத்தியகற்றிய மாற்றுச் சிந்தனை)-பரிவுகள்-வாழும் ஆசைகள் என்ற தளத்தில் வைத்துச் சிந்திக்கக்கூடிய உணர்வு நிலைகளாகவே நாம் உணர்கிறோம்.

 

"
மழை பொழிந்து

குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய

நிலப்பரப்பை

குருதியலைகள் மூர்க்கமாய்

கரைத்துக்கொண்டிருக்கின்றன…"

சுடுகலம் சுதந்திரத்துக்காகப் பிறந்திருக்கிறதாகவே தாங்கிக்கொள்ளும் தோளும்,மனமும் எண்ணிக்கொண்டிருக்க,இளமையைத் திருடுகிறது ஆயுதவியாபாரம்.அதன் நடுவே நொந்துபோன இனத்தின் விடுதலை சூழ்ச்சிகளோடு பின்னப்பட்டிருக்கிறது.வாழ்வினது ஆதாரமாக இருக்கும் நிலம் உயிரோடு உரிமைகட்டிப் பேசுகிறது.உப்பற்ற உடலுக்கு ஒருவேளை ஆகாரந்தர மறுக்கும் அரசு-அமைப்பு கட்டிவைத்திருக்கும்"பொதுப் புத்தியில்"குருதி அலைகள் வாழும் அத்தனை ஆதாரங்களையும் மூழ்கடிக்கிறது.மனம் நொந்துவிடுவதல்ல இந்தக் குறிப்புக்குள்.ஏனெனில்,"ஒரு முத்தத்தையும்

இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது

வினாடிகள் அல்ல

விரலிழுக்கும் துப்பாக்கி விசை."

மனித மனம் சுகத்துக்காக ஏங்கியிருப்பதும்,தன்னைக் குறித்தான பாதுகாப்பு உணர்வினாலும் தினமும் சாகா வரம் வேண்டிக் கொள்கிறது.இது இயல்பு.என்றபோதும்,இயற்கையின் விதிகளுக்கு மாறாக மரணத்தைக்காவிவரும் புறவுலகத்துப் பொதுத் தேவையானது எப்பவும் பொருளுலகத்தின் புதியபாணிக் கவர்ச்சி வாதத்தோடு"தேசம்-தியாகம்"பற்றிக் கதைவிடுகிறது.இறுதியில் இழக்கப்படும் மனித இருத்தலோ எந்த மகத்துவம் வேண்டிக் குருதி சிந்துகிறதோ அது வர்த்தகத்தினது வியூகத்தின் மகிமையாகிறது.பொல்லாத வாழ்வு.சின்னஞ்சிறாரைக்கூட வேட்டையாடும் ஒரு உலகை இந்தப் புவிப்பரப்புக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த இடர்விட்டு இடம் தேடியலைந்து உயிர்த்திருக்க இந்தச் சிறார்களால் முடிவதில்லை.திறந்த வெளிச் சிறையில் கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஆயுதம் தரிக்கப்பட்டு பலிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சூழலிலும் இந்தச் சிறார்களின் மனது, வலசைபோய் தகுந்த இடம் தேடும் பறவைகளைக்கண்டு ஏங்குகிறது!ஒரு கட்டத்தில் பசுமையான புவிப்பரப்பு என்னைக் கொல்கிறது.இது, எதற்காகப் பசுமையோடு விரிந்து மேவுகிறது?நான் ஆயுததாரியாக்கப்பட்டுக் கட்டாயமாகக் கொல்லப்படும் கணம் வரை எனது மனதில் ஏதோவொரு மூலையில் எல்லைகள் இழந்த புவிப்பரப்பின் இருத்தல் ஏக்கமாகிறது-இது உயிரின்மீதான நேசம்,வாழ்வுமீதான பற்றுப் பாசம்.நான் தடையின்றி எனது உயிர்த்திருப்புக்காக இந்த எல்லைகளை உடைத்தாக வேண்டும்-முடியுமா?

இங்கே,"பசுமை விரித்த புல்வெளியில்

மஞ்சளாய் பூத்திருக்கிறது

நேசம்

வலசைபோய்

மரங்களில் வந்தமரும் பறவைகளின்

சிறகில் மிதக்கின்றன

எல்லைக் கோடிலில்லா நிலப்பரப்புகள்…"

வாழ்சூழல் பாதிக்கும்போதோ பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் தாண்டுகின்றன,அவைகளைக் கைதுபண்ணிக் கஷ்ரடியில் இட்டுவிடுவதற்கு இந்த மனிதர்களுக்கு எவரும் பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை அவைகளின் வாழும் வலயத்தை.சுதந்திரமாகவே வாழுகின்றன பறவைகள் என்று மனித மனம் எண்ணுகிறது.நினைத்த பொழுதுகளில் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் அவை.அதுபோன்று நானோ அல்லது நீயோ ஆகமுடியாது.கடைக்கோடி யுத்தத்துள் மூழ்கித் தவிக்கும்போதும் உயிரைக்காத்துக்கொள்ளும் மனதுக்கு தேசங்களின் சட்டங்கள்-எல்லைகள் பெரும் மதில்களாகத் தடைகளைப் பிணைத்திருக்க மனிதம் குற்றுயிரோடு ஏங்கிச் சிதைகிறது.ஆப்பரிக்கக் கண்டத்த மனிதர்கள் மகத்துவமான வளங்கள் நிறைந்த தமது பூர்வீக நிலத்தை இழந்து கடல்தாண்டி ஐரோப்பிய நுழைவாயிலான ஸ்பெயினுக்குள் குற்றுயிரோடு கால்பதிக்கக் கடலில் மூழ்கிறார்கள் நேற்றுவரை.மாண்டுபோனவர்கள் கடலோடு அள்ளுபட்டுப்போனபின் ஒருசிலரைக் கைது செய்த எல்லைகள்,எனக்கும்-உனக்கும் சுதந்திரஞ் சொல்கின்றன.இந்த எல்லைக்கோடறியாப் பறவைகளின் சிறகைக் கனவுக்குள் திணித்துவிட்ட இந்தப் பயணம் மனிதர்களுக்கு வசமாவதில்லை.ஒரு புள்ளியில் மனிதம் சிறையுண்டு கிடக்கிறது.இது மனிதர்களே மனிதர்களுக்கான தடைக் கற்களாக இருப்பதற்கு எடுக்கப்பட்ட உடமைகளின் தெரிவில் தோன்றிய வரலாறு.எனினும், வாயினுள் மென்று தொண்டைக்குள் திணிக்கப்படும்வரை சுதந்திரம் இருப்பதென்ற இந்தத் தேசங்களின் வரைவிலக்கணத்தில்தாம் எத்தனைவகையான தடைக்கற்கள்?மனிதம் சிறகுகொண்டு விடுதலைக்காகப் பறந்துவிடுவதில் தோல்விகண்டுவிடுகிறது!"மதியப் பொழுதில்

பெயரறியா நிலப்பரப்பை

உதிர்க்கும் பறவை

எனக்காய் விட்டுப் போகின்றது

நெடுந்தூரப் பிரிவின்

வாதையை."

நாடுதாண்டி உயிர் தப்பினேன் அல்லவா?எனது வலி நெடியது.அது நெடுந்தூரத்துத்துக்குத் தள்ளப்பட்ட எனது இருப்போடு உறவாடும் தாயகத்தின் மடியில் எனது நீண்ட மனதைக் காவித்திரியும் தென்றலுக்குத் தெரியும்.இந்தப் பெயரறிந்திருக்க முடியாத புதிய நிலப்பரப்பை வந்தடைந்த எனது உயிர்ப்புக்குப் பறவையின் சிறகடிப்பில் உதிர்ந்துபோகிறது காலம்!காலத்தில் தவித்திருக்கும் எனது மனதுக்குக் கூட்டு வாழ்வு மட்டுமே கைகூடவில்லை.சுற்றுஞ் சூழலிழந்தும் சொந்தக் குடிலையிழந்த நெஞ்சுக்குப் பிரிவினது வலி நெடியகதையாகிறது.அதை எனது இயல்புக்கு மாறாக இந்தப் பட்ஷி தனது சிறகு விரிப்பில் வாதையைச் செப்பிச் செல்கிறது.

இங்கே, நான் பாடுகின்றதும் ஒருவிதத்தில் என்னை மீடெடுத்து மறு வார்ப்புச் செய்திடவே.எனது பிரிவின் தொடர்ச்சியான வலி எனது உறவுகளை விடுவதில்லை.அவர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடற்றவர்களாக இருக்கின்ற ஈழத்துப் போர் அரசியலில் எனது ஓலம் ஒரு நாடோடியைப்போல அல்ல-அது நானேதான்,இப்போது இந்த நாடோடியின் இதழ்கள் முணுமுணுக்கின்றன:"எனக்கான

எல்லாப் பாடல்களும் தீர்ந்துவிட்டன

சிலிர்ப்பூட்டும் இசைக் கோர்வைகளற்று

முதலாம் பக்கம் விரிக்கும் முன்னரே

முடிவை வாசித்துவிடும்

வாசிப்பனுபவமாய் அலுப்புடன் படபடக்கின்றன

வாழ்வின் பக்கங்கள்

எல்லை கடந்த கடல் நீரேரியில்

மண்ணைப்பிரிந்துவிடா வைராக்கியத்துடன்

இறுகப் பற்றிய மண்ணின் மணம்

கரைந்து

மறுகரத்தில் அகப்படாது விழிந்தோடிய

நீரைப்போல ஆயிற்று

இன்று,

ஊரின் நினைவுகள்

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"

எனும் ஒற்றைப்பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு

எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்

ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்

பிரியமுற்று

காதல் சொல்லத் தயங்கிய

இந்தப் பெண்ணின் விழிகள் பார்த்து

விடைபெறல் இயலாது

அன்பைத் தவிர

எதையும் பிரதிபலிக்கத் தெரியாத அம்மாவுக்கு

எழுப்ப எழுப்ப

நத்தையைப் போலச் சுருண்டுகிடக்கும் போர்வை

ஞாபகப்படுத்தக்கூடும்

எனது இல்லாமையை

தடயங்களின்றி

இந்த ஆண்டு இப்படி இறப்பு

இன்னபிற குறிப்புகளின்றி

பெயரறியா வனாந்தரத்தில்

கொண்டாட விரும்புகிறேன்

எனது மரணத்தை
."

 

பிரிவு-தொலைவு,இல்லாமை-வெறுமை.இத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நாம்.ஓரத்தில் உழன்று வாழ்வு நாறிப்போகிறது!

 

சவக்கிடங்குகள் நிரம்பி வழியும் தேசத்தில் இல்லாமை என்பது இருவகைப்பட்டது.ஒன்று உயிரற்றுப் போய் இருப்பிழத்தல் மற்றது முகம் தொலைத்துப்போன திசையில் சவங்களாக வாழ்வைத் தேடுவது.

 

இந்த இரண்டும் சாரத்தில் ஒன்றெனினும் செத்தவர்கள் செத்தவர்களே.சாவதற்காக அதைத் தினம் தேடுவதில்தாம் சாவினது வலி அதிகமாகிறது.

 

இந்தப் பூமிக்கு நான் வரக் காரணமாகவிருந்தவளுக்கு எனது இல்லாமை போர்வையின்வழி ஞாபகப்படுத்தும் நான் உண்மையில் அன்பையும்,அரவணைப்பையும் மீளப்பெறும் எதிர்பார்ப்பில் தவிப்பதன் தொடர்ச்சியாகவே அங்ஙனம் முணுமுணுக்கிறேன்.

அன்னையின் அகத்துக்குள் நான் இருக்கிறேன்

.அவள் வாழ்வின் பெரும்பகுதி எனக்குள்ளே விரிகிறது.

ஒருவகையில் நான் அவளை மனதில் காதலியாகச் சுமக்கிறேன்.அவளைப் பிரியும்போது என்னால் விழிகளோடு வழிகள் பொருத்த முடியவில்லை.நான் இந்த வலிக்காக நொந்து தொலைகிறபோது எனது மரணங்குறித்து எந்தத் தடயமும் இருக்கக்கூடாது

.இது எனது நிலைத்த இருப்பை இல்லாதாக்கும் கயவர்களை நோக்கியே நான் பாடுகிறேன்.

நான் இருப்பதாகவே அன்னை எண்ணிக்கொண்டாகவேண்டும்.

எனது அழிவில் திணறும் பெத்தமனம் என்னை வருத்தும்.அவளது பூரிப்புக்கு எனது மரணம் குறுக்கே நிற்பதை நான் ஒருபோதும் அனுமதியேன்!நான் வாழ்வினது எல்லாப் பக்கங்களையும் வாசிக்கிறேன்.அது இயல்பான எனது சுயத்துக்குச் சுகமான சங்கீதமாகிறது.எனினும்,இந்த வாழ்வு அலுப்பூட்டுகிறது.போர்,அழிவு,தேசம் தொலைத்தல்,குண்டடிபட்ட குருதி சிந்தும் உடலம்,ஊனம் மிக்க தேசத்தின் ஓழுங்கின்மீதான எனது விருப்பு எள்ளளவும் விட்டுப்போகாத திசையில் நான் மரணிக்கின்றதைத் தவிர வேறு வழி எனக்கில்லை.

 

 

 

(3)

 

 

 

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.

 

 

 

"
இன்றைய பொழுதில்

ஒரு போரிலிருந்து

இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து

எல்லாத் திசைகளிலிருந்தும்

ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்

 

ஒரு மனிதனை

சிதைக்காமல் தடுக்கும்

மிக எளிய சமன்பாடுகள்

ஒவ்வொரு அழிவின்

தீராநடனங்களிடையே

சுடர்விட்டொளிர்வதை

நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்

கவனிப்பதேயில்லை
."

 

டி.ஜே.தமிழனின் கவிதைகளைக் கவிதையென்றழைக்க மனதுக்கு முடியவில்லை-அது வாழ்வு.ஒரு பொழுதேனும் நாம் துய்க்கக் காத்திருக்கும் சாந்த வாழ்வை-தோழமையை-நெருக்கத்தை உணர்வது ஒரு தவ நிலை.எங்குமே அநுபவித்திருக்கமுடியாத மனிதக் கனவைக் கொண்டியங்கும் இளங்கோவின் மொழியைக் குறித்துக் "கவிதை-உணர்வு நறுக்கு-அநுபவம்-வாழ்வு" என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறேன்.ஆனால்,எதுவுமே இந்த இயங்கு நிலையைச் சரியாகப் பொருட்படுத்துவதாக நான் உணரவில்லை.

 

மரபுசார்ந்த கவிதை என்ற வடிவத்துக்குள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் தர்ம நியாயங்கள் பல.மரபுக் கவிதையென்றும்,புதுக் கவிதையென்றும் இன்னும் பி..கவிதையென்றும் தொடரும் மெத்தப்படித்தவர்களின் புரட்டு வித்தகத் துண்டுகளின் பின்னே, குறும்பா-கைக்கூ என்று தொட்டுக்கொண்ட இந்தக் கவிதை இன்று உவமையிழந்த அநாதையாகப் பல வடிவில்.

 

"
உவமையும் பொருளும் தம்முள் ஒத்தன என்று உலகம் அறிந்து ஒப்புமாறு உவமை அமையவேண்டும்"-இல்லையா?

 

மிக நெருக்கமாக உவமையணியைத் தனது அநுபவத்துக்குள் நுழைத்துக் கவிதை சொல்ல இளங்கோவால் முடிகிறதே."யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒற்றைவரியில் உயிர்த்திருக்கும் கணியன்"என்று மிகச் சாதாரணமாகச் சில உண்மைகளை உவமையாக்கி வைக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவதில்லை.இன்றைய மனித அவஸ்த்தையில் இந்த வடிவம் எப்போதோ செத்தழிந்துவிட்டது.கவிதை அநுபவமான காலத்தில் தேவராம்,திருவாசகம் என்னைப் பாதித்தது.பின்னாளில் கம்பனது கவிதை மொழி பிடித்துக்கொண்டது.ஆனால்,

 

"
இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து

விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி

பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி

தென் திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்

சாகைச் சம்பு
-தன் கீழ் நின்று"

 

என்று, மனிதம் செறிந்த மணிமேகலை என்றோ அறிமுகமாச்சோ-அன்றிலிருந்து இன்றுவரையும் எனது மனதில் பற்பல ஒளிக் கோலங்களை சாத்தனார் காவியம் ஏற்படுத்திக்கொண்டேதாம் இருக்கிறது.

 

எளிமை

மனித அழகு

எவரையும் ஒழுங்குபடுத்தமுடியமெனும் நம்பிக்கை

மொழியின் ஆளுமை

இலக்கணக் கட்டு

இடரேயில்லாத உவமைகள்

உருவகம்

உள்ளுறை

இறைச்சி
என்றெத்தனையோ அணிகள்கொண்டு சாத்தனார் என்னைப்படுத்திய பாடு மிகநேர்த்தியானது.

 

 

மணிமேகலைக்கான பதிகம்-முன்னுரையே சம்பு என்பவள்,கதிர்களைக்கொண்ட இள ஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடையவள் எனும் எதிர்மறையானவொரு உவமையாக எடுதாளப்பட்டு,எழில் மிகு மேரு மலையின் உச்சியில் தோன்றுவதுமாகவும்,பின்பு தென் திசை வந்து (நாவலந்) தீவின் காவற் தெய்வமாக விளங்குகிறாள் என்பதாகவும் ஆரம்பிக்கும் இந்த மணிமேகலைப் பதிகம் உண்மையில் எனக்குள்"ஒளியாக-அறிவுறும் ஒரு தியான நிலை"என்பதாகவே அநுபவமாகிறது.இது அறிதலை உவமையாக்கிற ஒரு பண்பைக் கொண்டியங்குகிறது.சம்பு ஒரு பெண்ணாக-தெய்வமாகக் காட்டப்படினும்,எனது கணிப்பின்படி அவள் அறதிலின் படி நிலைகளைக் கொண்ட சிந்தனையாகவே இருக்கிறது.

 

இந்த நிலைக்குள்ளே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படைப்பு என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தும் வித்தக நிலையை நான் மறுத்துவிடுவதால்,கவிதை என்பதை நீங்க வைத்து "உணர்வினைச் சிதைக்கும் மொழிக்கு"கவிதை வடிவம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.இதன்மீது கட்டிவைத்துக் கதைவிடும்"யாப்பு இலக்கணம்"பண்டிதர்களின் பல்லாக்காகவே எனக்குப்படுகிறது.நான் உணர்வதைச் சொல்ல முடியாத மொழிக்கு பட்டுக் குஞ்சம் வைத்துப் பல்லாங்கு பாடும்போது அங்கு "யாப்பு இலக்கணம்"இருக்கலாம்.ஆனால்,மனித வாழ்வு-அதன் அநுபவம்,சிந்தனை இருப்பதாக எவருஞ் சொல்ல முடியாது!

 

இந்த மணிமேகலை சந்தங்களாக விரிகின்றதும்,யாப்புக்குள் அமைய வருடிய எளிய மொழியைக் கொண்டிருப்பதும் ஒரு புதிய வகையிலான மரபோடு(மனித அழகைப் பிரதானப்படும் மொழி)விரிவதும் இலக்கியச் சிறப்பில்லை.மாறாக,மனிதம் நிறைந்தது என்றே நான் சொல்வேன்.

 

இப்போது இளங்கோவிடம் வருவோம்.அதாவது,நாடற்றவனின் குறிப்புச் சொன்ன இளங்கோவைச் சொல்கிறேன்-நீங்கள் சிலம்புக்காரனை எண்ணிக்கொள்ள வேண்டாம்.மனிதம் நிறைந்த அநுபவங்களாகவேதாம் டி.ஜே.யின் உணர்வினது மொழிகள் நம்மோடு ஒலிக்கின்றன.மிக எளிமையான மொழி.ஆனால்,இறுகிய வார்த்தைகள்.மிகத் தாரளமற்ற மிகச் சுருங்கிய சொற்களைக்கொண்டு உணர்வதைக் குறித்திருக்கும் பண்பு இளங்கோவின் வாழ்வுக்குள் சிக்குண்டுள்ளது.

 

ஈழத்துக் கதையாளர்களை-கவிதையாளர்களை மிகச் சமீபத்தில் வைத்து வாசிக்கும்போது,அவர்களிடத்தில் விருத்தியாகி வந்த பாண்டித்தியக் காய்ச்சல் இந்த இளங்கோவிடம் அறவே இல்லாது போகிறது.உணர்வை மொழிக்குள்ளிருந்து விடுவிக்கும் நீண்ட போராட்டத்தில் இளங்கோ மெல்ல இணைகிறார்.முடிந்தவரை எகிறித் தவிக்கும் உணர்வைத் தான் கொண்டியங்கும் மொழிக்குள்ளிருந்து பிரித்தெடுத்துத் தந்ததே டி.ஜே.யின் சிறப்பு.

 

இந்தச் சிறப்புக்கான உதாரணமாக "இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்" எனும் நறுக்கை எடுத்தால் பொருந்தும்.

 

"
செம்மஞ்சளாய்

இலைகள் உதிர்ந்து கொண்டிருந்த பருவத்தில்

முன்பொரு முறையும் சென்றிராத

சிறு தீவுக்குப் பயணித்திருந்தேன்

 

ஒரு மதுபான விடுதியின்

இருட்டு மூலையில்

என் கோப்பையை நிறைக்கும்

மதுவினைப்போல்

பரவியிருந்தது வெறுமை

 

அந்நியமான சூழலின்

தோலின் நிறத்தை நிராகரித்து

மொட்டவிழ்க்கும் தோழமை

அழகு நிறைந்தது

 

இப்போது

நமது உதடுகளில்

நுரைத்துத் ததும்புகின்றன

வார்த்தைகளும் மதுவும்

 

திடீரென

நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று

ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை

soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்

 

மதுவும் இசையும்

நரம்புகளைத் துளைக்க

தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்

நான் உன் பிரியத்துக்குரியவன்

ஆடுகின்றேன்

 

வாரமொன்று கழிந்து

புறப்படுகையில்

பேரூந்து யன்னலில்

அலைந்து திரிந்த தேக்கமிலை

காலம் முழுவதற்குமான

நமது பிரிவுத் துயரை

காவிச் செல்கிறது

 

இந்நள்ளிரவில்

நீ சமைத்துப் பரிமாறிய

உன் கலாச்சாரத்துக் கார உணவும்

soca நடன அசைவுகளும்

ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்

அதிகம் தொந்தரவு செய்கின்றன

 

நீயும் எழுத்தக் கூடும்

தென்னை சூழ்ந்த கடற்கரையில்

ஊரின் ஞாபகம் வந்து

விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த

ஒரு நாடற்றவனின் குறிப்பினை
."

 

 

இலகுவானவொரு மொழியுள் தேக்கி வைத்திருக்கும் மிக நேர்த்தியான மனிதமொழியை பிரித்தெடுத்து நான் சிதைக்கின்ற வேலைக்குள் வதைபடுவதற்கு இந்த அநுபவம் என்னை இதுவரை துரத்துகிறது- முடியவில்லை.அன்பு-நட்பு என்பது மிக உண்மையான மனித நிலை.இந்த உண்மை என்பதை பொதுப்புத்தியுள் திணித்து எவரும் விளங்க முற்படுமிடத்து எனது உண்மை உண்மையில்லை.எனக்கு நண்பர்கள் எவருமில்லை.தெரிந்தவர்கள்-பழக்கமுள்ளவர்கள் உண்டு.நட்பு-நண்பர் என்பதை நான் வடிவத்துள் அடக்கங்கண்ட அர்த்தப்பாட்டோடு சொல்வதில்லை.அத்தகையது நட்புத்தாமா என்று நான் எனக்குள் கேட்டு வைப்பதுண்டு.

 

மேலே இளங்கே மனித உணர்வினது உச்சமான நட்பு நிலை-அன்பு நிலை-பாசம் குறித்து உணர்வதை வெளிப்படுத்துகிறார்.சிக்கமன் பொறைட்டின் உளவியற் பகுப்பாய்வைக்கடந்து ஆயுவற்ற-அறமற்ற மனிதப் பொது நிலைக்குள் நான் சஞ்சரிக்கிறேன்.அங்கே,எனக்காகக் கட்டிவைத்துள்ள இந்தப் பாசத்துக்குள் எந்த "ஆய்வும்"வந்து குடுமியில் பிடித்து அர்த்தஞ் சொல்ல முனைதல் என்னையும்,எனது மனிதக் குணத்தையும் கொச்சைப்படுத்துவதை அந்த நவீனத்துவம்-இந்த நவீனத்துவம் என்பதையோ அல்லது யதார்த்தவாதம்-ரியலிசம் என்றதைப் புனித்தப்படுத்தும் நோக்கங்கட்கமைய விளக்க முற்படுவதையோ எனது அநுபவம் மறத்தொதுக்கிறது.ஒரு தொகுப்புக்குள் அநுபவமான வாழ்வைக் கவிஞனது உள்ளத்தைக் கண்டு வாழ முற்படுவதே எனது குறிப்பின் நோக்கம்.

 

என்னைப் பொறுத்தவரை மெய்ப்பாடு என்பது உடம்பினது வழியாக(அடிக்காதீர்கள்.அது புலன்களின் வழியாகவென்று வித்துவான்கள் சொல்வார்கள்)உணர்ச்சியை-அநுபவத்தை-மனித நிலையை-உயிரின் தவிப்பைப் புலப்படுத்துவதாகும்.இந்த நிலையை ஒத்த இளங்கோவின் உயிரின் தவிப்பைப் பாருங்கள்:

 

"
மதுவும் இசையும்

நரம்புகளைத் துளைக்க

தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்

நான் உன் பிரியத்துக்குரியவன்

ஆடுகின்றேன்
"

 

 

பிரியத்துக்குரியவனாகும் இளங்கோ மனது துள்ளித்திரிகிறது.காடுமேடெல்லாம் இறக்கை விரிக்கும் இந்த மனதுக்கு உலகத்தின் அனைத்து எல்லைகளும்,எல்லைகள் அல்லவே.இது,

 

 

"
அந்நியமான சூழலின்

தோலின் நிறத்தை நிராகரித்து

மொட்டவிழ்க்கும் தோழமை

அழகு நிறைந்தது
"

 

என்று தனக்கான புதிய தத்துவத்தைத் தனது வாழ்நிலையிலிருந்து பாடமாகக்கொள்கிறது.இதன் உலகம் மிகவும் வரிந்தது.ஒரு சிறு தருணத்தில் தன் உயிரையே வழங்கக் காத்திருக்கும் இந்த ஆற்றல்மிக்க மனித நிலை மிக உயர்ந்த நட்போடு வாழ்வைத்தினம் புதிப்பிக்கிறது.இன்றைய முட்கள் நிறைந்த நவீன அடிமைத்தனமிக்க சமூக அமைப்புள் இதுவொரு கலகக் குரலாக-உயிராக இந்த மனித சமுதாயத்தின் அடித் தளத்திலே ஊற்றெடுத்தபடி நம்மையெல்லாம் வியாபிக்க, நமக்குள் அண்மிக்கிறது புதிய வேதம்.தோழமையின் உயிர்த்திருப்புக் காமத்தோடு கைகுலுக்கும்-வீரத்தோடும் கை குலுக்கும்.இதுதான் பொருள்வாழ்வில் நமக்கு அநுபவமானது.ஆனால்,இதைக் கடந்தவொரு உலகம் உயிரின் தவிப்பில் உலாவருகிறது.இதுதான் மோன நிலை-தியான நிலை என்றெல்லாம் முற்றும் துறந்தவர்கள் சொல்வார்கள்.இந்த முற்றையும் திறக்காத என் பரதேசி நிலையுள் இது வாழும் ஆசை என்றாக விரியும்.இந்த ஆசை தன்னைச் சுற்றிய பெளதிக உலகத்தைப் புரிவதிலும்-நேசிப்பதிலும் தன் மோனத் தவதைக் குவிக்கிறது.அங்கே,

 

 

 

"
இந்நள்ளிரவில்

நீ சமைத்துப் பரிமாறிய

உன் கலாச்சாரத்துக் கார உணவும்

soca நடன அசைவுகளும்

ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்

அதிகம் தொந்தரவு செய்கின்றன
"

 

 

என்று நான் உணரும்போது, மனிதவாழ்வு விருப்பின் அதி உச்சமான தருணம் உயிரின் ஓசையாக எனக்குள் பிரதி செய்யப்படுகிறது.இது, என்னைத் தொந்தரவும் செய்கிறது.நான் சார்ந்து வாழ்பவன்.எனக்கு மற்ற உயிரோடு கலக்கும் அவா எனது மனத்தில் சதா கசிந்தபடியேதாம் இருக்கும் .இதை மேன் மேலும் மெருகுப்படுத்தும் எதிர்ப்பால் வினை எனது மறு உற்பத்தியை நோக்கிய வரம்பில் காதற்கீதம் சொல்லும்.அது, மனிதம் தளர்ந்து சோம்பிய நிலையுள் புத்துணர்வுக்காக ஏங்கும் நிலை.இதை நானோ நீயோ தகவமைத்துத் தரவில்லை.இது இயற்கையின் கொடை.இதை இன்னொரு மாகாக் கவிஞனான கையின்றிக் கையின(Heinrich HEINE)சொல்லும் மொழியினு}டாக நான் உறுதிப்படுத்தமுடியும்.இவனும்,டி.ஜே.தமிழனும் நெருங்கி வரும் நல்லதொரு இடம் மனிதத் தவநிலையாக இருக்கிறது.இருவரது பாடலும் ஒரு சமாந்திரமான மனிதத் தேர்வை நோக்கிச் செல்கின்றன.

 

 

Drei und Dreissig Gedichte

(Die Loreley)

Ich weiss nicht,was soll es bedeuten,

Dass ich so traurig bin;

Ein Maerchen aus alten Zeiten,

Das kommt mir nicht aus dem Sinn.

Die Luft ist kuehl und es dunkel,

Und ruhig fliesst der Rhein;

Der Gipfel des Berges funkelt

Im Abendsonnenschein."-என்று கையின பாடுவதும் மனிதத் தவநிலையாகும்.முப்பத்தி மூன்று கவிதைகளுக்குள் கையின கட்டிவைத்திருக்கும் மனிதம் இயற்கையோடு,சமூதாய வாழ்வோடு-வெறுமையோடு-தனிமையோடு,பிரபஞ்சத்தோடு-தன்னைச் சுற்றிய அனைத்தோடும் உறவாடும் தவநிலையாக விரிகிறது.

 

"எனக்குப் புரியவில்லை,அதற்கான அர்த்தம்,

மிகவும் கவலையோடு இருக்கிறேன்,

பண்டையக் காலத்துப் புனைகதை ஒன்றினால்,

இது எனது மனதிலிருந்து விலகுவதாகவில்லை.

 

காற்றுக் குளிருகிறது கூடவே இருட்டாக இருக்கிறது

ரையின் ஆறு அமைதியாகப் பாய்ந்தோடுகிறது

மலையுச்சியின் முனை ஒளிருகிறது

மாலைச் சூரிய ஒளியுள்
…"

 

 

கையின கலக்கமுறுவதும்-களிப்புறுவதும்பின்பு வெறுமைப்பட்டுக்கிடக்கும் வீட்டினது முன் ஆகாயத்தைப் பார்க்கும் பொழுதுகளும்,நாடற்றவனின் புரிதலுக்குள் சிக்குப்படும் நேசமும்-பாசமும்,வெறுமையும் ஒன்றின் தொடர்ச்சியாக எனக்குள்ளும் விரிவதின் தருணம்தாம் எமக்கான மனித இருத்தலும்-இன்மையுமாகும்.எனவே,

 

 

"
நீயும் எழுத்தக் கூடும்

தென்னை சூழ்ந்த கடற்கரையில்

ஊரின் ஞாபகம் வந்து

விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த

ஒரு நாடற்றவனின் குறிப்பினை
."

 

 

பண்டைய இலக்கியத்துள் காதலன்,தன் காதலியின் அல்குலையும்,இடுப்பையும் உவமை வாயிலாக வர்ணிப்பான்.

 

"
அவாப் போல அல்குல் அகன்றது,சான்றோர் கேள்வி அறிவுபோல இடுப்பு நுண்மையானது"என்றும் வர்ணிக்கின்ற சூழலில் காதலனின் உணர்வுநிலை-வாழ்வு,நெருக்கமுற முனையும் ஆசைக்குப் பின்பான வாழ்தல் வெளிப்படுகிறது.இத்தகைய நிலைமையானது எல்லாவகை நியாயங்களுக்கும்,எல்லைப்படுத்தல்களுக்கும் உட்பட்டுக்கிடக்க முனையாது தனது சுய தெரிவை மிக இலகுவாகத் தேர்ந்து கொள்கிறது.இது இடம்,பொருள்,ஏவல்-காலம் என்ற தர்க்க நிலைமைகளைப் பொருட்படுத்துவதில்லை.இங்கே,

 

"
திடீரென

நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று

ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை

soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்"

 

 

என்று கூறும் நான்.அதே கணத்தில் எல்லையில்லாப் பறவையாக எனது சிறகை விரித்து ஆடுவேன்.அது என்ன பெயரிட்டு அழைத்தாலும் நான் ஆடும் நாட்டியம் மனிதத்தின் வாழும் விருப்பு.இந்த விருப்பே என்னைச் சகலவிதத்திலும் அசைக்கிறது.இதுள் நாம் மகிழ்ந்திருக்கிறோம்,அன்று எனது மண்ணில் இதே மகிழ்வு எனக்குள்ளும் ஊருக்குள்ளும் பாயும் நதியாகத் தடம் புரண்டோடிய காலவெளியில்,நினைவு குத்திநிற்கிறது.இதோ அந்த வாழ்வின் சுவடு:

 

"
மகிழ்வின் சாயல் கலந்துருகிய அக்கணத்தில்

புத்தரையும் காந்தியையும் குழைத்துப் பூசியபடி

அந்நியமான சிலர்

எங்கள் தேசத்தில் பரவினர்

எந்தக் கேள்வியுமில்லாது

 

சிரித்தபடி வந்தவர்கள்

முகங்கள் இறுகியபடி

முள்ளுக் கம்பிகளுக்குள் புதைந்ததற்கு

காலம்மாறி வீசிய

அமைதியின் புயலும் காரணமெனலாம்
"

 

-
அமைதியின் மணம்.இப்படியாக நம்மை நடாற்றில் தள்ளிய நெடும்பொழுது இன்னும் விடிந்த பாடில்லை!நெருப்புக்குள் தேடிக்கொண்டிருக்கும் குளிர்மைக்காக நெருங்க மறுக்கும் உண்மை, ஒரு பொழுதாவது நம்மை அண்மித்தாகவேண்டும்.இளங்கோ மிக அழகாகவே அந்த உண்மைகளின் பின்னே அணிவகுத்துத் தனது நாடற்ற நிலைக்குள் உணர்ந்தவற்றைக் குறிப்புகளாக்குவதில் மிக நேர்த்தியாகத் தன்னையும் புறவுலகத்தையும் உணர்ர்ந்துகொள்கிறார்.இந்த உணர்வின் வெளிப்பாடுகள், மனித நிலையை மறுத்தொதுக்கித் தனிநபர் வாதத்தின் பாரிய உச்சபச்சக் கணைகளை அள்ளியெறியவில்லை.மாறாகத் தன்னையிழந்த பொது மனிதக்கூட்டில் தானும் ஒரு குஞ்சு என்று கீத இசைக்கிறது,டி.ஜே.யின் கவிதைகள்.

 

கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும்

தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்

எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை

இன்னும் தம்என எம்மனோர் இரப்பின்

முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்

இன்னா தம்ம

-புறம் 208.

 

(
தொடரும்,தொடராமலும் போகலாம்.)

 

 

.வி.ஸ்ரீரங்கன்.

18.07.2008

 

 

டி.ஜே.சொல்லும் நாடற்றவனின் குறிப்புகள்


June 28, 2008

மாற்றுக் கருத்துத் தேசத் துரோகம்:சில கருத்துக்கள்

மாற்றுக் கருத்துத் தேசத் துரோகம்:

சில கருத்துக்கள்.

 

இன்றைய தினத்தில் முதலாளியச் சமுதாயமானது மிகவும் பலமான பாதுகாப்புக் கவச்தோடு தன்னைப் பாது காத்துக் கொள்வதில் பாரிய வெற்றீயீட்டியுள்ளது.இது தன் மூலதனவிருத்திக்கான தேடுதலில் படு பயங்கராமாக இந்த உலகைக் கூறுபோட்ட காலம்போய் அதை முற்று முழுதாகக் கவர்ந்து கொள்வதில் தமது கூட்டாளிகளோடு இணைந்து விய+கமமைத்துச் செயற் படும் இன்றைய நிலையில் தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.

 

 

பாசிசத்தின் கருத்தியல் மனது:

 

எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.தமிழீழத்தைச் சொல்லியே"துரோகம்-தியாகம்"என்னுங் கருத்தாங்கங்களை மலினப்படுத்துகிறோம்.மாற்று என்பதைப் புரியாதவர்களாக மாற்றுக் கருத்தென்பது"தமிழீழத் தேசத்துக்கு"(புலிகளுக்கு) எதிரானதென்கிறோம்.உலகில் எதிர்க்கட்சிதாம் உண்டு மாற்றுக் கட்சி இல்லை என்றும் எழுதுகிறோம்! மாற்றைப் புரிந்துகொண்ட அழகைப் புலிகளினூடாகப் புரியும் ஆபத்தால் இத்தகைய அடாவடித்தனமான புத்தி பாசிசத்தின் மிகக் கொடுமையான பக்கங்களைத் "தமிழீழத் தேசம்"எனும் கருத்தாக்கத்துள்-புனைவுள் மறைத்துக்கொள்ளும் "தமிழ் மனது"இதுவரை போட்டுத்தள்ளிய தமிழ்பேசும் மக்களின் உயிரோடு தேசக்கனவைத் தொடர்ந்து நிலைப்படுத்த எத்தனிக்கிறதுஇதன் தொடர்ச்சியாகப் புலிகள் இன்றுவரை தமிழ் மக்களின் தன்னெழிச்சியை மறுத்துவருகிறார்கள்.மக்களே தமது வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்காகப் போராடவேண்டிய இன்றைய போர்காலச் சூழலில் மக்கள் எந்தவுரிமையுமற்ற வெறும் மந்தைகளாகக் காலத்தையோட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த அவலமான சூழலில் மக்களை அணிதிரட்டி அந்த மக்களின் பிரச்சனைகளை வென்றெடுப்பதற்கு வக்கற்ற புலிகள் தம் இருப்புக்கும்,தமது இயக்க நலனுக்குமாக மக்களைப் பற்றிப் புரிந்துள்ளார்கள் என்பதைப் புலிகளின் நலனுக்காகக் கண்ணீர்வடிக்கும் புலிப் பினாமிகளின் எழுத்துக்களில் அப்பட்டமான புலியரசியல் வெளிப்படுகிறது.அதற்குக் குருவிகள் மறுபிரசுரஞ் செய்த யாழின் கட்டுரையே போதுமான உதாரணமாகக் கொள்ள முடியும்.

 

வர்க்கங்களாகப் பிளவுண்ட மகள் சமூகமாகவும்,சாதி ரீதியாகப் பிரிந்த மக்கள் சிறு,சிறு இனக்குழுக்களாகவும் இலங்கையில் பல்வேறு நாடுகளின் விருப்புக்குட்பட்டுத் தமது விடுதலைக்கான வேட்கையுடன் போராடும் "தெரிவுகளில்"நம்மை நாம் சாகடித்து வருகிறோம்.அல்லது அடிமைப்படுத்தி வருகிறோம்.

எங்களை இணைக்கும் தமிழ் எனும் மொழியானது அடிப்படையில் நம்மைக் கழுத்தறுக்கிறது.இது ஒடுக்குமுறையை ஏவி விடும்,துரோகி சொல்லி அழித்துவிடும்.மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லாதாக்குவதற்கான முன் நிபந்தனையாக "உயிர்ப்பலியெடுக்கும் தமிழீழப் போராட்டத்தை"ப் புலிகள் செய்துவரும் இந்தத் தருணம்வரை நம்மால் இழக்கப்பட முடியாத மானுட இழப்பு நடந்தேறியுள்ளது.நாம் மனிதர்களாகச் சிந்தித்தலென்பது அடியோடு மறந்துபோன விசயமாகப் போய்யுள்ளது."தமிழீழத் தாயகம்"நமது மக்களில் பலரை நரவேட்டைக்குத் தயார்ப்படுத்தியபோது சகோதர இயக்கப் படுகொலைகளிலிருந்து உட்கட்சிப்படுகொலைகள்வரையும் தொடர்ந்து இப்போது சாதாரணமான மக்களின் அதிருப்த்தியைத்"துரோகம்"எனும் நிலைக்குள் உணரும் ஒரு பெரும் பாசிச மனம் கொலைகளை நியாயப்படுத்தியும், அத்தகைய கொலைகளுக்கெதிரான கருத்துக்களைத் தேசத்துக்கு எதிரானதாகவும் கட்டியமைக்கும் இந்த ஊனமிகு நடாத்தை நம்மைப் பயங்கரமான முறையில் அழித்துவிடத் துடிக்கிறது!

 

கடந்த நமது தேசிய இனச் சிக்கலானது வெறும் மொழிவழி தோன்றிய ஒன்றுமில்லாத இனவொடுக்குமுறையில்லை.இது முதலில் கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய விடையம்.ஓட்டுக்கட்சிகள் முன்தள்ளிச் சொன்ன கருத்தியற்றளத்தை மனதிலிருத்திக் கொண்டு யாரும் போராட வெளிக்கிளம்பிவிடவில்லை.போராட்ம் என்பதே பாரிய உந்து சக்தியான மக்கள பங்கு கொண்டே நடைபெறுகிறது. எனினும், இந்தப் நடவடிக்கையானது ஒவ்வொரு தனிமனிதரின் பங்கில்லாது இயங்கவும் முடியாது.இத்தகைய நிலையில்தாம்"தேசியத் தலைவர்"எனும் ஒளிவட்டம் புலிகளின் தலைவருக்கு ஏற்றப்பட்டு அவர் தமிழ்பேசும் மக்களின்"வெடி வெள்ளி"ஆகிறார்!அனைத்துப் பிரச்சனையும் தமிழ் தேசியத்துக்கூடானதாகப் பார்க்கப்பட்டு அதன் வழி"தேசத் துரோகம்-தியாகம்"எனும் மந்திரம் பாசிசப் பாச்சலாக மக்கள் சமுதாயத்தில் அராஜகத்தைக்கடப்பிடிக்கிறது.இத்தகைய நிலையில்தாம் புலிகளுக்கு-சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்கு இலங்கையில் சாவு மணி அடிக்கப்படுகிறது.இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு அராஜகம் தலைவிரித்தாடும் இன்றையபொழுதில் புலிகளின் அப்பட்டமான அராஜக அரசியலைச் சிங்களக் கட்சிகளில் முதன் முதலாகச் சிங்களத் தலைவரான மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இன்றைய மக்கள் கூட்டணி அரசே தத்தெடுத்துச் சிங்கள மக்கள் மத்தியிலும் மற்றும் சிறபான்மை இனங்கள் மத்தியிலும் கட்டவிழ்த்துவிடும் பாசிச அரசியலானது இன்று எவரையும் நிம்மதியாக உறங்கவிடுவதில்லை.இத்தகைய அரசியலின் விருத்தியே இலங்கையில் இன்று பத்திரிகையாளர்கள்மீதான அதீதக் கண்காணிப்பும் அதன் அடுத்தகட்டமாகப் பத்திரையாளர்களை அழித்தொழிப்பதுமாக நடந்தேறுகிறது.

 

இது அப்பட்டமாப் புலிகளோடு சம்பந்தப்பட்ட மிகக்கெடுதியான அராஜகமாகும்.கடந்த காலத்தில் இத்தகைய அரசியலுக்குக் கிட்லரின் அரச நடவடிக்கையே உதாரணமாகக்கொள்ளத் தக்கதாக இருந்தது.இன்று புலிகளே கிட்லரின் அனைத்துவகையான அரசியல் நடாத்தைகளையும் ஒழுங்குறக் கடைப்பிடிக்கும் குறுந்தேசியவாதிகளாகவும்,பாசிசவாதிகளாகவும் இருக்கிறார்கள்.இவர்களின் வழி முழு இலங்கையும் இத்தகைய அரசியல்போக்குக்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டுவிட்டது.

 

 

மக்களின் வாழ் நிலை என்ன?:

 

 

இலங்கையில் நம்மை இன்னொருவினம் அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.நாமும் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்தக் காரணத்தால் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் விய+கத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்(ள்).நாமோ நமது மக்களுக்கு எதிராகக் காரியமாற்றியபடி அந்தகைய நொண்டித் தனமான அரசியலைக் கேள்விக்குட்படுத்தும் கருத்துக்களை"துரோகம்"என்று தீர்ப்பு எழுதி இன்னுமொரு நரவேட்டைக்குத் தயாராகிறோம்.மக்களைத் தொடர்ந்து அந்நியமாக்கும்"தமிழீழப் போராட்டம்"சாரம்சத்தில் தவறானவர்களால் தவறான நோக்கத்துக்கமைய நடாத்தப்பட்டு வருகிறது.பேராசை,பதவி வெறி பிடித்த புலிகளின் பினாமிகள் தமது அற்ப வருவாய்க்காகவும்,மேற்காணும் பதவிச் சுகத்துக்காவும் மக்களையும் அவர்களது ஆன்ம விருப்பையும் அடியோடு மறுத்தொதுக்குவது என்றைக்கும் மகத்தான செயலாக இருக்கமுடியாது.இவர்களே இன்று மாற்றுக்கருத்தென்பதையும்,மாற்றுக் கட்சியென்பதையும் புலிகளின் ஏகப் பிரதிநித்துவ அரசியல் விய+கத்தின் அடிப்படையில்"தேசத் துரோகம்"எனும் பாசிசச் சிந்தனைவழி வசுவாடி வருகிறார்கள்.உண்மையில் புலிகளும்,அவர்கள் வழி குறுங்குழுக்களுமாகவுள்ளு தமிழ் ஆயுதக்குழுக்குளும் செய்யும் இந்த யுத்தமும்,அதைச் செய்வதற்காக வேட்டையாடப்படும் சிறார் பிடிப்புமேதாம் "தேசத் துரோகம்"ஆகிறது!இளைஞர்களை ஆயுதத் தாரிகளாக்கி அவர்களின் வருங்கால வாழ்வையே யுத்தத்தில் கருக்கி,ஒரு தலைமுறையை அழித்தவர்கள் அடுத்த தலைமுறையையும் அதே அரசியல் தெரிவோடு நடாத்த முனையும் இந்த அடாவடித்தனமான யுத்தம் மிகக் கெடுதியான அராஜகமாகும்.இதற்குத் "தியாகம்"எனும் முலாம் ப+சும் புலிகளினது பினாமிகள் தமது குழுந்தைகளைப் பத்திராமாகப் படிக்க வைத்து
Nமுலும் புலிகளினது அராஜகத்துக்குத் தத்துவ விளக்கம் அளிப்பதில் இலங்கையில் ஒரு தலைமுறை காணாது போகப்போகிறது.

இலங்கையில் சிங்கள அரச-கட்சியாதிக்கப் பயங்கரவாதத்தை நிலைப்படுத்திய "ஈழப்போராட்டம்"உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சனைகளுக்கு மாற்றுத் தீர்வாகவே ஆயுதக் குழுக்களால் முன்வைக்கப்பட்டதாகப் புலிப் பினாமிகளும் இன்றுஞ் சொல்லுகிறார்கள்.இங்கே,மாற்று என்பதைத் தெரிவு செய்தவர்கள் இந்த அடாவாடித்தனமான யுத்தத்துக்கு எதிரான கருத்துக்களை-அறைகூவல்களை "மாற்று"என்பதே கிடையாது-அது "தேசத் துரோகம்" என்றும் பாசிசத் தனமாக எழுதுகிறார்கள்.புலிகளால் முன் வைக்கப்படும்"தீர்வுகள்" மற்றும் யுத்த நிறுத்தங்கள்,இடைக்கால நிர்வாக ஆலோசனைகள் குறித்த அவர்களது வியாக்கியானங்கள் அனைத்தும் இந்த யுத்த அரசியலுக்கான மாற்று என்கிறார்கள்.ஆனால்,"போரை-யுத்தத்தை நிறுத்து,அதன்வழி அரசியல் பேச்சினூடாகத் தீர்வை எட்டும் விய+கத்தைச் செய்",மக்களின் அடிப்படை வாழ்வை மேம் படுத்தும் முன் நிபந்தகைகளின்வழி யுத்தத்தை நிறுத்தும் கருத்துக்களைத் தேசத் துரோகமென மொழியும் மனதே இன்றைய புலிகளின் அழிவுக்கு முக்கிய காரணியாகம் இருக்கிறது.

 

 

நமது மக்களின் வாழ் நிலை என்ன?இன்றுவரை இலட்சம் மக்களின் உயிர் பறிக்கப்பட்டு வருகிறது.உயிர்வாழ்வுக்கு ஆதாரமான அதிமானுடத்தேவைகள் அனைத்தும் யுத்த யந்திரத்துக்கான தீனீயாகப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள்மீது மிகக்கொடுமையான இயக்க-அரச ஆதிக்கம் நிலைப்படுத்தப்பட்டு யுத்தப் பிரபுகளின் குடும்பச் சுகத்துக்கான எடுபிடிகளாக மக்களின் வாழ்வு நிர்பந்தப்படுத்தப்படுகிறது.இதற்காக இல்லாத தேசங்களை இருப்பதாக உழைக்கும் மக்களுக்குச் சொல்லப்படுகிறது.இதைச் சொல்வதற்கு ஆயுதமே முன்னணிக்கு வருகிறது.இந்த வருகையோடு அப்பாவி மக்களின் தலைகள்"தேசத் துரோகம்"என்ற போர்வையில் நாளாந்தம் உருண்டு வீழ்கிறது!அதையும் நியாப்படுத்த சிங்கள அரசின் அரசியல் விய+கம் மெல்லக் காரியமாற்றுகிறது.இலங்கை மக்களின் வாழ்வு இன்று இந்த அழகில் இருக்கும்போது,இதற்கு எதிரான அம்பலப்படுத்தல்களை"தேசத் துரோகம்"என்று பாசிசிஸ்டுக்கள் சொல்லி மாற்றுக் கருத்தாளர்களை அன்றிலிருந்து இன்றுவரையும் வேட்டையாடுகிறார்கள்.இது மிகப்பெரும் சமூக வியாதியாகித் தமிழ்பேசும் மக்கள் சமூகத்தையே காட்டுமிராண்டிச் சமுதாயமாக மாற்றியுள்ளது.இத்தகைய சமுதாயமானது எந்தச் சந்தர்ப்பத்திலும் தன்னை உலக விழுமியங்களோடு இணைக்கும் ஜனநாயகப் பண்பை ஏற்பதற்கு முரண்டு பிடித்தே வருகிறது.எளிதில் ஏமாற்றப்படும் ஒரு இனமாக இருக்கும் இந்த அடிமை மனதுக்குத் "தமிழீத் தேசம்"என்பது கனவாக இருக்கிறது.அது எப்படிச் சாத்தியம்-ஏன் அவசியம் என்பதற்கு அதனிடமிருக்கும் விளக்கம் சிங்களப் பயங்கரவாதத்திடமிருந்து தமிழர்கள் நிம்மதியாக வாழ்வது என்று கொள்கிறது.ஆனால்,அதே பயங்கரவாதத்தைக் கட்டவிழ்து தமிழ் மக்களில் கணிசமானர்வளை வேட்டையாடி வரும் இயக்கப் பயங்கரவாத்தை"தேச நலன்"எனும் வரையறைக்குள் அது ஏற்கிறது.விசித்திரமாக இல்லையா?

 

இது தவறானபாதை.ஏனெனில்,இதுவரை அழித்தொழிக்கப்பட்ட அப்பாவிப் போராளிகளினதும் மக்களினதும் சாவுகள் நமக்கு ஆயுதக் குழுக்கள் குறித்தும்,பாசிசச் செயற்பாடு குறித்தும் உரிய வடிவில் புரிய வைத்திருக்கிறது.இது நல்லதொரு படிப்பினையாக இருக்கும் இன்றைய ஈழப்போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்றுச் சிங்களத் தரப்பு மேல் நிலை வகிப்பதற்கும்,சிங்களவர்களின் கைகள் உயர்வதற்குமான சாத்தியத்தைப் புலிகளே செய்து கொடுத்துள்ளார்கள்.இங்கே, புலிகள் செய்வது(மாற்றுக் கட்சி,கருத்து தேசத் துரோகம் என்பது) தம்மைத் தவிர வேறெந்த மேய்ப்பனும் தமிழர்களுக்கு விசுவாசமாக இல்லையென்பதைக் கருத்தியற்றளத்தில் ஆழவ+ன்றுவதற்கே.இதனூடாகத் தமது இயக்க நலனைப் பேணுவதற்கும் தம் இயக்கத்தின் பின்னாலுள்ள எஜமானர்களுக்கு விசுவாசமான அடியாளாக இருப்பதற்கும் அது தொடர்ந்து தமிழ்பேசும் மக்களைத் துரோகிகளாக்கிக் கொன்று குவிக்கிறது.இதை வேறொரு வடிவில்(பயங்கரவாதிகள்)இலங்கை அரசு செய்கிறது.சாரம்சத்தில் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை!

 

உண்மைகளை உரக்கச் சொல்லல்:

 

விடுதலையென்பது புலிகளின் பாணியிலான போராட்டத்தால் சிதைக்கப்பட்டு எமது சமூக வளர்ச்சியென்பதைச் சிதிலமாக்கி மந்தமடைய வைத்தார்கள் உலக எஜமானர்கள்.அதாவது, தேசிய விடுதலைப் போரில் பிரவேசித்த அமைப்புகளைத் தோழமையோடு அங்கீகரித்து உள்வாங்கிக் கொள்ளவேண்டிய தரணம் முன்னிருக்கும்போது,ஏதோவொரு அரசின் நலனுக்காக அந்தந்த அமைப்புகளை அழித்ததென்பது சகோதர இயக்கப் படுகொலையில் அதி உச்சம் பெற்றுப் புலிகள் ஏகாதிபத்தியங்களின் ஏவல் நாய்தாம் என்று உறுதிப்படுத்தியது.எமது கண்கள் முன்னாலேயே சரிந்த ஏகப்பட்ட மாற்றியக்கப் போராளிகளின் குருதி இன்றுவரையும் இந்தக் கொடூரத்தைப் மறக்காது வைத்திருக்கிறது.ஈழத்தில் பலவாறாக முகிழ்த்த இயக்கங்கள் நடுத்தர வர்க்க இளைஞர்களின் அதீத ஆர்வத்தாலும் ,இலங்கைப் பாசிச வன் கொடுமைச் சிங்கள அரசாலும் முகழ்த்திருப்பினும் அவைகளைக் கையகப்படுத்தித் தனது தேவைக்கேற்ற வடிவத்தில் தகவமைத்த அந்நியச் சக்திகள் இறுதியில் ஒவ்வொருவரையும் மோதவிட்டுத் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கின்றன.இங்கே புலிகள் என்பது அந்நியச் சக்திகளால் ஆட்டி வைக்கப்படும் பொம்மைகளாகவும்-பிசாசுகளாகவுமே இன்றுவரை இருக்கிறார்கள்.இந்த வகை அரசியல் எந்தத் தரப்பைப் பிரதிநித்துவஞ் செய்கிறது என்பதைப் புரியாத இயக்கவாத மாயைக்கு முகம்கொடுப்பது பாரிய உபத்திரமானது.புலிகளினது அனைத்துக்கொலைகளையும்,அடக்கு முறைகளையும் மக்களின் விடிவுக்கானதாகவும் தேசத்தின் உரிமைக்கானதாகவும் கதைவிடும் இன்றைய இயக்கவாத மாயை மக்களைப் ப+ண்டோடு அழிக்கும் உலக அந்நிய ஆர்வங்களுக்கு இசைவான கருத்தியலை நமக்குள் விதைத்து எஜமான விசுவாசத்தைக் கடப்பாட்டுணர்வோடு செய்யும்போது அழிவது இன்னுமொரு தலைமுறையே!

 

கடந்த இரண்டாவது உலகமகாயுத்தத்தில் கிட்டலரின் புனிதம் ஜேர்மனியர்களை மட்டுமல்ல உலகத்தில் பலகோடி மானுடரை அழித்த வரலாறை நாம் மறத்தலாகாது.கிட்லரின் அரசியலுக்குப் பின்னால் நின்ற மூலதனம் இப்போது மிகப்பெரும் வலுவோடு புதிய தெரிவுகளோடு உலகை வேட்டையாடும் இன்றைய அரச விய+கத்துக்குப் புலிகளும் ஒரு அடியாட்படையே.பிள்ளையானோ அல்லது கருணாவோ தம்மை நேரடியாகவே அந்நிய ஏவல்படைகள்தாமென உறுதிப்படுத்தும்போது புலிகளோ தம்மைத் தியாகிகளாகச் சொல்லியபடியே உள்ளே இருந்த நம்மைக் கருவறுக்கிறார்கள்.இங்கே இலங்கையில் அந்நியச் சேவை செய்யும் குறுங்குழுக்காளக இருக்கும் ஆயுதக் குழுக்களைவிட ஆபத்தானவர்கள் புலிகள் என்பது நிரூபணமானது.ஏனெனில்,அவர்கள்"துரோகி"சொல்லியே அழித்துவரும் உயிர்களுக்குத் தேச நலனே காரணமெனக் கருத்தாடித் தத்துவ நியாயம் கற்பித்துக் கொலைகளை இன்டஸ்ரீயல் முறையில் நடாத்தி வருகிறார்கள்!இவர்களே, மாற்று என்பது தேசத் துரோகமென்று சொல்லித் தமது இயக்கச் சர்வதிகாரத்தைத் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாகச் செய்து வருகிறார்கள்.இதனால் முழுமொத்த மக்கள் சமுதாயமே அராஜகத்தின் முன் மண்டியிட்டுத்"புலிகளின் தாகம் தமிழீத்தாயம்"என்று கொலைக்கு உடந்தையாகிக் கிடக்கிறது.

 

 

எங்கள் தேசத்தின் வாழ்சூழல் எந்த வர்க்கத்தால்-எந்தெந்தத் தேசங்களால் பாதிப்புக்குள்ளாகி நாம் கொலையுண்டோம்-கொலையாகிறோம்?இத்தகைய வர்கங்கங்களும் அவர்களது எஜமானர்களும் இலங்கையில் சதா கொலை அரசியலை வளர்த்து வரும்போது கொலைகளைச் சொல்வதாலும்-அவற்றை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதனாலும் ஒரு பெரும் மாற்றம் வந்துவிடுமா?

 

மாற்றமென்பது நமது மக்களால்தாம் உருவாகவேண்டும்.என்றபோதும், அங்கே நடந்தேறும் மக்கள் விரோத"தமிழீழப் போராட்டம்"அராஜத்தை மக்கள்மீது திணிப்பதற்கான நியாயமாக முன்வைக்கப்படும் "தேசத் துரோகம்"எனும் பாசிசச் சர்வதிகார முன்னெடுப்பை நிறுத்துவதற்கான ஒரு உந்துதலை வெளியுலக மக்களின் தோழமையோடு அடைய முடியுமெனும் உண்மையின் உறுதி வழியே நாம் இவற்றை அம்பலப்படுத்தியாக வேண்டும்.இதற்காகவேனும் உண்மைகளை உரக்கச் சொல்லல் வேண்டும்.

 

 

ப.வி.ஸ்ரீரங்கன்.

01.06.2008

 

 

தமிழீழக் குடை

Filed under: கவிதை

தமிழீழக் குடை

 

 

தமிழீழத்துக்கான

"ஆதரவை"க் கோருகிறது பொங்கு தமிழ்

வர்த்தகத் தேசியம்

ஆதரவு இருந்ததனாற்றான்

தற்கொடைப் போராளியும் அவர் தாய்ப்பாசமும்

இதுவரை இவர்களைச் செல்வர்களாக்கியும்

தேசத்தைக் குருதிக்குள் தொலைத்தபடி

குழந்தைகளைக் குண்டுடன் தொலைக்கிறது
!

 

தமிழைச் சொல்லியே

தரணியில் சந்தைப்படுத்தப்படும்"ஈழத்துக்கு"

ஆதரவைக் காட்ட

நீ,

அழகான தமிழிச்சி

அமுகிப் பிடிக்கும்

அற்புதத் தமிழீழக் குடையை வேண்டு
!

 

கோரிக்கைதான் இது

 

 

கொம்பு முளைத்த

தமிழ்த் தேசியத்தின் ஏக குத்தகைக்காரர்

செய்வித்துத் தரும் குடைக்களும்

தமிழீழத்தை மொத்தமாக ஏலத்தில் விட

தமிழிச்சி உடலைத் தற்கொடையாய்க் கொள்ளும்

தமிழீழத் தாகம் மட்டுமல்ல

அதைச் சொல்லி கல்லாவை நிறைப்பவர்களும்

தமிழிச்சியின் உடலைப் புசித்தபடி

வர்த்தகத்தில்
"ஆதரவு"கோருகிறது!-மங்கு தமிழ்!!

 

 

இதுவும்,

தேசத்தின் விடிவுக்குத்தான்

பல்லிளிக்கும் உடலும்

பகட்டான உடையும்

பக்கா வியாபாரம்

தேசியத்தின் பெயரில்

 

 

தூ

பெண்ணுரிமை

தேசியம்

விடுதலை

தமிழீழம் சுயநிர்ணயம்

குப்பைகளைச் சொல்லியே

கோபுரங்கள் கட்ட

தாய்மையை ஏலத்தில் விடும் புலிப்பாசிசம்

 

தமிழையும்

தமிழச்சிகளையும்

ஏலத்தில்விட்ட இந்தத் தேசியம்

இலட்சம் உயிர்களையுந் தேடிப் புதைத்தது

தேசிய வர்த்தகத்தில்

 

இதுவும் அதன் வினைப் பயனாய்

 

 

இன்னும்

என்னென்ன கூத்துக்கள்

இந்தக் கொலைக்காரக் கோமாளிகளால்

நமக்கு விடியும்
?

 

 

.வி.ஸ்ரீரங்கன்.

20.06.2008

தேசமும் தெருச் சண்டையும்.

தேசமும் தெருச் சண்டையும்.

 

 

“உலக ஆதிக்க வர்க்கம் மிகக் கவனமாக இருக்கிறது.ஒவ்வொரு தனிநபர்களையும் அதீத சுதந்திரத்தைக் கோரும் நிலைக்குள் தள்ளி சமூகக் கூட்டைத் தகர்த்து ஒற்றை மனிதர்களாக்கியபடியே அவர்களைச் சுய நலமிகளாக்கி விட்டுள்ளது.இத்தகைய மனிதர்களால் சமூகக்கூட்டோடு இசைந்து வாழ்வது முடியாது போய் தனித்த “தீவுகளாக” வாழ்வு நாறுகிறது.இங்கே ஒருவரும் “பொதுவான” வேலைத்திட்டத்துக்கு வரமுடியாதுள்ளது.அவரவர் கொண்டதே கோலமாகிறது.இத்தகைய தருணத்தில் குறிப்பிட்ட தனி நபர்களைக்கொண்டு தமக்குத் தோதான அரசியலை மக்கள்முன் விரிப்பதற்கான கைக்கூலி அரசியல் மிக வேகமானமுறையில் நடாத்தப்படும் விய+கத்துக்கு முகவர்கள் பெருகிக்கொண்டே வருகிறார்கள்.”

 

“புரியுமா உனக்கு?

உனது இனத்தின் ஆணிவேர்

அறுபட்டுக் கொண்டிருக்கிறது!

ஏன்,எதற்கென்று கேள்விகேட்ட

மக்களைக் கொன்றுவிட்டு

துரோகியென்றாய் அன்று,

இன்றோ

கொன்று குவித்த உடல்களின் மீதிருந்து

ஆட்காட்டுகிறாய்,நானில்லை அவனென்று.

என்னே ஒரு ஈழம்?

இதற்குத்தானா இவ்வளவு சாவுகள்?”

 

 

 

“ஈழம்”குறித்த கனவுகள் தகரத்தொடங்குகிறது.இத்தகைய தகர்வில் மக்களே தமது உறுதியானவொரு நிலைப்பாட்டைத் தமது வாழ்வியல் நம்பிக்கைகளுடாகச் சாதிக்கும் சமூக அபிலாசையாக இது விருத்தியாகி போருக்கு அகப் புறமாக எதிர்ப்பிடும் தருணம் தோன்றுகிறது.இது வலியது!இதைத் தடுத்து மக்களின்மீது மீளவுமொரு போர்ச் சுமையைத் திணிக்கும் இயக்கவாதத் தந்திரங்கள் நிலைத்த வெற்றியை அடைவதற்கில்லை.இதுவே, ஈழக் கோசத்தின் பொருள்வயப்பட்ட தோல்வியாகவும் கருத்தியல் தளத்திலான தகர்வாகவும் தமிழ்ச் சமுதாயத்தின் உட்புறத்தே பாரிய வெறுப்பாகவும் நிலவிக்கொண்டிருக்கிறது.இந்தச் சமூக உளவியலைத் தடுத்தாகவேண்டுமானால் மீளவும் இனங்களுக்கிடையிலான இனவாதம் மேலெழுந்தியங்க வேண்டும்.இனவாதத் தீயுள் மக்களின் உணர்கள் திணிக்கப்பட்டு இலங்கைவாழ் மக்களினங்களுக்குள் தொடர்ந்து பதட்டமான கொதி நிலை அரசியலைத் திட்டமிட்டு நடாத்தியாகவேண்டும்.இத்தகைய நிலையினால்மட்டுமேதாம் இயக்க இருப்பானாலுஞ்சரி அரச-பாராளுமன்ற இருப்பானாலுஞ்சரி இனிமேல் தொடரமுடியுமென்ற அரசியல் சூழல் இலங்கையின் பொருளாதார நிலைமையினால் உருவாகிறது.இத்தகையவொரு சூழலின்பால் உந்தித்தள்ளப்பட்ட இலங்கையின் எதிர்காலமானது அந்தத் தேசத்து மக்களுக்கான இருண்ட இராணுவப் பாசிச அரசாக விருத்தியாகிவருகிறது.இதுவே புலிகள்போன்ற அரசஜந்திரத்தைக்கொண்ட எந்தவொரு இயக்கத்துக்கும் அவசியமானதாகும்.

 

இன்று இலங்கையில் இருவேறு அரச வன்முறை ஜந்திரங்கள் நிலைபெற்றுவிட்டன.இவை இருவேறு நிலப்பரப்புகளை ஆதிக்கத்துக்குள் கொணர்வதற்கான கடும் முயற்சியில் கட்சி-இயக்க ஆதிக்கமாக உருவாகிறது.இராணுவாதத்தையே சார்ந்தியங்கும் ஓட்டுக்கட்சிகள் ஒரு புறமாகவும் மறுபுறம் இராணவக் கட்டமைப்பையே தமிழர்களின் விடுதலைப் பரிணாமமாகப் பரப்புரை செய்தபடி ஆதிக்கத்தை நிலைப்படுத்த மக்கள் உரிமைகளைவேட்டையாடியபடி அராஜகத்தைக் கட்டவிழ்க்கும் வன்முறைஜந்திரமாக இயங்கும் புலிகள் மற்றும் குறுங்குழுக்களுமாக இலங்கையின் அரசியல் வரலாறே மாறிப்போயுள்ளது.

 

ஈழத்துக்கான போராட்டமென்பது இலங்கைத் தமிழ்பேசும் மக்களையும்,அவர்களது சமூகசீவியத்தையும் பலநூற்றாண்டுகள் பின் தள்ளிய பாரதூரமான சமூகவிரோதமாகும்,இது இன்றைய வரலாறாக இருப்பதை நாம் இருட்டடிப்புச் செய்யமுடியாது.சமுதாயத்தின் மொத்த விருப்பானது இழந்தவுரிமைகளை மீளப்பெறுவதாக யாரும் குறிப்பிட முடியாது.ஏனெனில் யாரு எதை இழந்தார்களென்று சாதாரணப் பொதுமக்களுக்கு இதுவரை புலப்படவில்லை.கடந்த கால்நூற்றாண்டுக்குமுன் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கும்,இன்றைய சிதிலமடைந்த வாழ்க்கைக்கும் எந்தெந்தக் காரணம்கூறினாலும,; தமிழ் மக்களுக்கு ஒப்பீட்டுரீதியான புரிதலுண்டு.இன்றைய வாழ்வானது தமிழர்கள் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்ததைவிடப் பன்மடங்கு தாழ்ந்த வாழ்வாகும்.

 

மக்களின் உரிமையென்பது தனியாட்சிச் சுதந்திரமென்றும்,தமது பகுதிகளைத் தாமே ஆளவேண்டுமென்ற கருத்தும், இலங்கைத் தமிழர்களிடம்”ஆண்டபரம்பரை மீளவும் ஆளத்துடிக்கிறது”என்ற ஆதிக்கவாதிகளின் ஆசையை மட்டுமே சுட்டிக்கொள்வதாக இருக்கிறது.தமிழ் பேசும் மக்களை அரசியல்ரீதியாக வேட்டையாடிய தமிழ் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட அரசியல் வங்குரோத்தே, சிங்களஅரசை- பயங்கரவாத அரசாக்கும் மூலகாரணத்தைக் கொண்டிருந்திருக்கிறது.இன்றைய நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளெல்லாம் தாமும் வன்னிக்கு வெளியில் வாழும் தமிழ்பேசும் மக்களைப்போன்று சமூக சீவியத்தைப் பெறுவதாகவே உணரப்படுகிறது.இனியுமொரு ஏமாற்றுப் போரை புலிகளின் நலனுக்காகச் செய்வதற்கு மக்கள் குறுக்கே நிற்கிறார்கள்.ஆனால்,மக்களின் ஜீவாதாரவுரிமைகளைக் கொச்சைப்படுத்தும் புலிகளின் அராஜக நடவடிக்கையானது இளஞ் சிறார்களை மீளவும் போருக்குத் தயார்ப்படுத்தும் ஈனத்தனமாக விரியும்போது,சமூக அக்கறையுடைய மனிதர்கள் இனியும் விட்டேந்திகளாக,விடுபேயர்களாக இருக்கமுடியாது.அப்படியிருத்தல் புலிகளின் தயவில் பதவி,பணம்,அந்தஸ்த்துப் பெற்றுச் செல்வச் செழிப்பில் புரளும் தமிழ்ப் பாசிஸ்டுக்களுக்குத்தான் முடியும்.

 

“நேற்றையவுறவும்

இன்றைய கூட்டும்,கும்மாளமும் புதிதல்ல

ஆடுகள் எருதுகளோடு இணைவதில்லை

நாய்கள் ப+னைகளோடு சேர்வதில்லை”

 

நெருக்கடிக்குள்ளானது தமிழ்பேசும் மக்களின் உயிர்வாழ்வு.அது, மீளவும் சிதைவுற்றத் தமிழ்பேசும் மக்கள் சமுதாயமே போர்ச்சுமையினால் பெருமளவில் அழிந்து சிறைப்படும் தருணத்தைச் ஸ்ரீலங்காவின் சிங்கள ஆளும் வர்க்கம் கனவுகாண்கிறது.இந்த இலங்கையின் எதிர்பார்ப்பை மீளவும் யுத்தத்துக்கூடாகச் சாதிக்கத்தக்க அரசிலைப் புலிகளினது இராணுவ முகாம்-கடற்படை முகாம் தகர்ப்புப் போரட்டம் மெல்லச் செய்துவரும்போது,அந்த விய+கத்தைப் பலப்படுத்தும் அரசியலை மிக வலுவான தளத்தில் எடுத்துச் செல்பவர்கள் இலங்கை அரசின் பின்னும் இந்திய உளவுப்படையின் ஆதரவோடும் இயங்கும் குறுங்குழுக்களாகும்.இன்று,பிள்ளையான் தலைமையில் மீளமுடியாத பகை முரண்களை அறுவடைசெய்யும் குழப்பகரமானவொரு அராஜக அரசியலைக் கிழக்குமாகண மக்கள் அனுப்பவித்துவரும்போது அந்த மக்களுக்கு ஜனநாயகம் மெல்ல வழங்கப்படுவதாகப் புலம் பெயர்ந்த புலியெதிர்ப்பு அணியின் ஒருபகுதி சொல்லித் திரிகிறது.ஆனால்,கடந்த முப்பது ஆண்டுகளாகக் கொடிய யுத்த அரசியல் முன்னெடுப்பால் அழிந்து நாசமாகிவரும் மக்களின் வாழ்வாதாரங்கள் இன்றுவரையும் அந்த மக்களின் உயிர்வாழ்வுக்காகக் காத்து,அவாகளின் உரிமையாக்கப்படவில்லை.

 

மக்கள் திறந்த சிறைக்குள் அடைக்கப்பட்டு, இலங்கையரசின் ஆதிக்கத்துக்கான கைதிகளாக்கப்பட்டு அடிமைகளாக உயிர்வாழ நிற்பந்திக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த யதார்த்தத்தில் ஏழை பாழைகளின் குழந்தைகளோ போருக்காகத் தமது குழந்தைத் தனத்தையிழந்து கொடும் துப்பாக்கி காவி-குண்டுகாவி வெடித்துச் சாகவேண்டும்!இத்தப் பெரும் அநீதியை இனிமேலும் மௌனமாகவிருந்து நாம் பார்க்கமுடியாது.இந்த “அற்பத்தனமான” சமூக விரோத ஈழப்போரானது ஒருசில நூறு தமிழரின் வசதிக்கும்,வாய்புகளுக்குமானதென்பதை நாம் பெரும்பாலும் மக்களரங்குக்கு கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்-அவற்றைச் செய்யாது, தவறுவிட்டுள்ளோம்.அதற்கான காரணம் நாமறிந்ததுதான்.அராஜமான படுகொலைகளால் புலிகள் இந்தவொரு வேலைத் திட்டத்தையும் செய்யமுடியாதபடி நம்மைச் சிதைத்து வருகிறார்கள்.மக்களின் உரிமைகளை மறுக்கும் இலங்கை அரசின் அதே காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையைப் புலிகளும் தகவமைப்பதானால் இங்கே அதிகாரங்களைக் கைமாற்றும் போரே தொடர்கிறதென்ற உண்மையை மக்கள் அறியும் சூழலொன்று உருவாகிதென்பதுண்மை.இந்த உண்மைகளைச் சிதைப்பதில் இனவாதம் ஆற்றும் அரசியலானது மிகப் பெரிதானது புலிவகைப்பட்ட இலங்கை அரசியலுக்கு.இதுவே தொடர்ந்து குண்டுகளாக இலங்கைவாழ் முழுமொத்த மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு ஆங்காங்கே வெடிக்க வைக்கப்படுகிறது.

 

இந்த மக்களிடம்”ஈழக்கனவு”இனியொரு பொழுது எடுபடுவதற்கான எந்தத் தார்மீகப்பலமும் அவர்களிடம் இல்லை.அவர்கள் நிர்க்கதியாக்கப்பட்டு இதுவரை ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.யுத்தம் என்பது எந்தத் தரப்பாலும் நியாயப்படுத்தப்பட்டு மக்களிடம் உயிர்பறிக்கும் ஒரு அரசியலாக மாற்றப்படுகிறது.இது முழு இலங்கை மக்களுக்குமே பெரும் ஆபத்தாக மாற்றப்பட்டு கொடிய இனவாதம் வளர்த்தெடுக்கப்படுகிறது.இத்தகையவொரு இனவாதப் பிளவு அரசியலை மிகவும் விரும்புகின்ற அந்நியத் தேசங்கள் இலங்கையினதும் புலிகளினதும் யுத்த ஜந்திரத்துக்குத் தொடர்ந்து நிதியாதாரத்தை வழங்கி வருகிறார்கள்.மறுபுறமோ குறுங்குழுக்களை வைத்து மக்களின் உரிமையை மக்களே உணராத கருத்தியல்போரை நடாத்தி மக்களின் சுயவெழிச்சியை அடக்கி அழித்துவருகிறார்கள்.இதன் தொடர்ச்சியான அரசியல் பாச்சிலானது மக்கள் மத்தியில்தொடர்ந்து கொலைகளையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் மனங்களை அச்சத்துக்குள் தள்ளி இலங்கையில் உயிர்வாழ்தலே சாத்தியமில்லையெனும் அளவுக்கு உணர்வோடு விளையாடி அவர்களை இலங்கைத் தீவிலிருந்து இடம்பெயரவைத்துச் சிங்கள ஆட்சியாளரின் பெருங்கனவைத் தமது நலன்களுக்கான தெரிவில் நிலைப்படுத்த விரும்புகிறார்கள்.

 

இதுவே,நமது மக்களின் அன்றாட வாழ்வாக இருக்கும்போது புலிகளின் விசுவாசிகள் இன்னும் “ஈழம்,விடுதலை,சுயநிர்ணயம்”எனும் கோதாவில் கதைவிட்டுப் புலம் பெயர் தமிழரிடம் உண்டியல்கிலுக்கித் தமது வரும்படியைப் பெருக்கி வருவதில் மிக முனைப்பாகவே யுத்தம் துணைபுரிகிறது.மொத்தத்தில் மக்களின் அன்றாடக் குருதி சிந்தும் பயங்கரமான கொடிய யுத்தம்,யுத்தத்துக்கு வெளியில் இருக்கும் பெரும்பாலான இலங்கையருக்கு ஏதோவொரு முறையில் நன்மை பயக்கும் ஊடகமாக இருக்கிறது.இந்தவொரு நிலைமையின் வெளிப்பாடாகவே இறுத்தித் தமிழன் இருக்கும்வரை “விடுதலைப் போர் தொடரும்”எனும் பாசிச யுத்தக் கோசம் மக்களின் உரிமைவடிவில் நமக்குள் மீளவும் விதைக்கப்படுகிறது.

 

“பாருங்கள்

இவர்களுக்கு

பசிப்பது தேசிய நலனாம்

மற்றவர்களுக்குப் பசிப்பது துரோகமாம்!

தூ…”

 

இன்றெமது காலச் சூழலானது மெலினப்பட்டவொரு கருத்தியற்றளத்தையும்,புரிதற்தடுப்புக்கான மாறாட்டங்களையும் கொண்டிருக்கிறது.இதன் பன்முகத் தாக்குதலானது பின் தங்கிய சமூகச் சக்திகளிடம் மிகவும் மோசமாவொரு உள-உடலரசியல் வகைப்பட்ட “மாதிரி பரப்புரைகள்”மலிந்து கிடக்கிறது.இந்தக் கருத்தியற் தளத்தின் எல்லையிலிருந்துகொண்டு மக்கள் சா
hந்த மதிப்பீடுகளை அணுகுவது மிகப் பெரும் ஆபத்தானது.(இதை முன் நிபந்தனையாகக் கொள்வோமானால் கருத்துகளின் மைய வலுவானது அந்தந்தச் சமுதாய இருப்பை ஆட்டிப் படைக்கும் அனைத்துக் கூறுகளையும் மட்டுப்படுத்துவதும்-புரட்டிப்போடுவதும் உணரப்படும்.எனவே இதன்பாலான புரிதல், மீள் கருத்தியற் சுதந்திரம்,மக்களாண்மைத்துவ திரட்சிப் பெருங்கூட்டக் கருத்தாளுமை,பன்மைத்துவ வெளிபாட்டுச் சுதந்திரம்போன்ற ஜனநாயகக் கூறுகளையும்,அதன் விளைவாகவெழும் தெளிந்த அறிவுக்கட்டமைப்பையும் வலியுறுத்தி நாம் செயலூக்கம் பெறவும்-மாற்றுச் சிந்தனைக்கும் வழிதோன்றும்)குறைவிருத்திச் சமுதாயங்களில் பழைய ப+ர்சுவாக்கருத்தாக்கங்களும்-படிமங்களும் இன்னும் மலினப்பட்டுக் கிடப்பது இங்கெல்லாம் வெறும் குறுந்தேசிய வெறிச் செயற்பாடுகளும், இனவாத அரசியற்போக்கினதும் திட்டவட்டமான அரசியற் சூழலின் வெளிப்பாடே.

 

இது மேற்குலக மூலதனத் திரட்சியின் தொடர்ச்சியாகவெழுந்த மதிப்பீடுகளினது வடிவமே.இந்தச் சிக்கல் சந்தைவாய்பின் இருப்புக்காக மாற்று மொழிபேசும் மானுடர்களையும் தமது சொத்தாகப் பயன் படுத்த முனையும் போதும்- பாரிய நிலம் வலிந்துருவாக்கப் பட்டு அதை ஆயுதம் தரித்த வன்முறை ஜந்திரத்தால் காக்க முனையும்போது, அந்த அரசும் நாடும் குறிப்பிட்ட மாற்று மொழிமக்களுக்குச் சிறைக்கூடாமாகி விடுகிறது.திமிர்தனமான அதிகாரத்துவம் “துப்பாக்கிக் குழலிலிருந்து வருவது”ஒருபகுதியுண்மை மட்டுமே.மாறாக, அந்த அதிகாரமானது மிகக் கடுமையான”உளவியற் கருத்தாங்களால் “கட்டியமைக்கப்படுகிறது.இது துப்பாக்கியைவிட மிகப் பல்மடங்கு காட்டமானது.இதிலிருந்து கட்டியமைக்கப்பட்ட “மனிதவுடலானது”அந்த அதிகாரத்தை மையப்படுத்திய ஒரு வடிவமாக மாற்றப்படுகிறது.இந்த நிகழ்வுப் போக்கானது தலைமுறை,தலைமுறையாகத் தகவமைக்கப்பட்டுக் கடத்தப்படுகிறது.இதைக் கவனப்படுத்தும்போது இன்றைய நமது அரசியலானது இவ்வளவு கீழ்த்தரமாக”மக்கள் விரோதமாக”இருந்தும் அதைத் தேசியத்தின் பேரால் இன்னும் அங்கீகரிக்கும் மனிதவுடல்களையும் அந்தவுடல்களுடாகப் பரதிபலிக்கும் அதிகாரத்துவ மொழிவுகளையும் “நாம”; மிக இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

 

 

 

இங்கு,நிலம் சா
hந்த-மொழிசார்ந்த-மதம் சார்ந்த புனைவுகளாற் மனிதவுடல்கள் இனம் காணப்பட்டதும்,பயிற்றுவிக்கப்பட்டததும் நடந்தேறியது.அது மானுடர்தம் வாழ்வை பொருள் சார்ந்த குவிப்புறுதிய+க்கத்துக்கேற்வாறு மீள் மதிப்பீடுகளைக் காலாகாலம் ஏற்படுத்தித் தீர்மானகரமானவொரு உளவியற்றளத்தை விய+கமாக்ககொண்டு முதலாளிய நலன்களைக் காக்கிறது.இன்று பல்தேசிய உற்பத்தி-நுகர்வுக் கொள்கையானது தேசங்கடந்த பெருமூலதனத்தின் நலனின் பொருட்டு பற்பல மதிப்பீடுகளை மீளுருவாக்கஞ் செய்கிற இன்றைய நிலையில்-பல்தேசியக் கம்பனிகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர முதலாளி வர்க்கம் வெறுமையோடு,விரக்திக்குள்ளாகித் தனது இருப்புக்கான ஜீவமரணப் போராட்டத்தை குறுந்தேசிய வெறியாகவும்-தேசப் பாதுகாப்பு,தேச நலன் எனும் மாய்மாலக் கருத்துகளாலும் மக்களைக் கோடுகிழித்துத் தனது சந்தைவாய்பைத் தொடர்ந்து பாதுகாக்க முனையும்போது இத்தகைய கெட்டிதட்டிய உடலரசியலும்,உளதேசபக்தத் நெறிமுறைமைகளும் மனிதவுடல்களைக் காவுகொள்கிறது.

 

ஈழவிடுதலை இயக்கங்களின் எழிச்சிகள் அன்னிய சக்திகளால் பாழடிக்கப் பட்டு தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயவுரிமைக்கு வேட்டுவைப்பதில் இந்தியாவும்-அமெரிக்காவும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் செயற்பட்டு வருகின்றன என்பதைப் பலதடவைகள் சொல்லியே வருகின்றோம்.இயக்கங்களின் சுயவளர்ச்சியை மட்டுபடவைத்து தத்தம் உதவியால் அவற்றை வீங்க வைத்து பின் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது உண்மை.இன்று புலிகள் இயக்க உடைவென்பது மிகச் சாதுரியமான இந்தியாவின் அரசியல் நடத்தையைச் சொல்வதற்கான எடுகோளாக இருக்கிறது.வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் செல்லும் பிள்ளையான்-கருணா போன்ற அராஜகவாதிகள் கிழக்குக்கு ஜனநாயகத்தைக் காட்டும் விடி வெள்ளிகளான அரசியலில் எத்தனை வகையான “துரோகங்கள்”மலிந்துகிடக்கிறது!

 

தமிழ்பேசும் மக்களை சிங்கள சியோனிச பொளத்தமதவதமும்,அவர்தம் தரகு முதலாளியமும் மிகக் கொடுரமான முறையிற்றடக்கியபோது அந்த ஒடுக்குமுறைக் கொதிரான தமிழ்பேசும் மக்களின் தார்மீகப்போரை இலங்கைப் போலிப் பொதுவுடமைவாதிகளும்-பாராளுமன்ற சகதியில் வீழ்ந்த கம்ய+னிஸக் கட்சியும் .”அது சாத்தியமல்ல, அதுபொருளாதார ரீதியில் நடைமுறைச் சாத்தியமல்ல,அது புவியியல் ரீதியில் சாத்தியம் அல்ல, அது அரசியல் ரீதியில் சாத்தியமல்ல.தமிழ்த் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும்,சிங்களத்தொழிலாளர்களுக்கும்-விவசாயிகளுக்கும் அதனால் நன்மையில்லாததால் நாம் தனிநாட்டை எதிர்க்கிறோம்.”

இந்த வகையில் எதிர்தார்கள். இதனால் இனவொடுக்குறைக்கெதிரான முற்போக்குத் தன்மைவாய்ந்த போராட்டம் குட்டி முதலாளித்து இயக்கங்கள் வாயிலாக முன்னெடுக்கும் வராலாற்றுத் தவறுக்கு அவர்கள் ஒத்திசைவானார்கள்.புலிகளின் இருப்புக்கு இன்றைய இலங்கையின் இனவொடுக்குமுறைமட்டுமல்ல காரணம்.போலி இடதுசாரிகளினதும் தவறும் காரணமாக இருக்கிறது.இத்தகைய தவறேதாம் இன்று புலிகளால் கொல்லப்படும் ஒவ்வொருவருக்கும்”துரோகி”எனும் பாசிசப் பொய் சொல்லித் துரோகமிழைக்கப்படுகிறது.இன்றைய அரசியலில் இலங்கை அரசை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓரளவு ஜனநாயகப் ப+ர்வமான அரசென்றும் கூறுவோர் உளர்.இவர்களினது மதிப்பீடு இலங்கை அரசின் கடந்தகால மதிப்பீட்டிலிருந்தெழுகிறது.எனினும்,இத்தகைய அரசைப் பின்னின்றியக்கும் இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் அந்நியத் தொடர்பு மற்றும் புலிகளுடான தேன் நிலவு யாவும் இன்று முழுமையான சர்வதிகார அரசவன்முறை ஜந்திரத்தை இனங்களுக்கிடையிலான அதிகாரப்பரவலாக்கலெனும் வடிவில் உற்பத்தி செய்கிறது.இதுள் புலிகளே மிகப்பெரும் துரோகிகளாகி மக்களை ஒடுக்கும் இலங்கை அரசின் ஓட்டுண்ணிகளாகவும் இந்தியக் கைக்கூலியாகவும் இருக்கிறார்கள்.இதற்குக் பிரபா-கருணாவழி தோன்றிய புலிகள் நல்ல உதாரணமானவர்கள்.

 

“தீட்டுப்பட்ட

மனிதவுடல் தீக்காக

வெளுத்துக் கிடக்கிறது

மீள் நோக்கா வீரவணக்கமோ

மீட்டுவதற்கு முந்திக் கொண்ட

உணர்வுக் கிடங்கில் உருக்குலைந்தது”

 

இன்று புலம் பெயர்ந்த மாற்றுக் கருத்தாளவட்டமானது பெரும் நெருக்கடிக்குள் வலிந்து வீழ்ந்துள்ளது.அன்று, மனிதப்படுகொலைகளை மறுத்து ஓடிய இந்த வட்டம் பெரும்பாலும் யுத்தத்துக்கு எதிரானதாகவும்,இலங்கை-இந்தியச் சதியையும் புலிகளின் அராஜகத்தையும் வன்மையாகக் கண்டித்து மக்களின் அதீத மானுடத் தேவைகளுக்காக் குரல் கொடுத்தது.இத்தகையவொரு தளத்தில் பல்தரப்பு வர்க்க நலன்களைக்கொண்டவர்கள் இணைந்து கருத்தாடியது யுத்தத்துக்கு எதிரானதென்ற மானுட அவசியத்துக்கான கருத்துநிலைகளால்தாம்.அங்கே, மானுட அழிவைத் தடுத்து நிறுத்துவதும் இலங்கையின் இனப்படுகொலையைத் தடுத்து மக்களுக்கான அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக மக்களைச் சார்வதென்று நோக்கிருந்ததாகக் காட்டினார்கள்.என்றபோதும், இவர்களிடம் மண்டிக்கிடந்த அராஜக மனோபாவம் இயக்கவாதத்தைத் தொடர்ந்து விசுவாசிப்பதிலும் அதன் வாயிலாக வந்ததடையும் நிதி-பதவி எனும் இரட்டை ஆதாயங்கால் மனித விழுமியத்துக்குக் குறுக்கே நின்பதென்ற முடிவில் அவர்களை இயங்க அநுமதித்தது, இந்திய-இலங்கை மற்றும் புலிகளின் ஆதிக்கம்.

இன்றைய இழி நிலையான கருத்தாடல்களுக்குக் காரணமான அரசியல் காரணிகளைத் தேடுமிடத்து இந்த வட்டத்தின் அழிவுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆரம்பமான முடிச்சை அவிழ்த்தவர்கள் புலிகளே என்பது மிகச் சாதுரியமாக அறியவேண்டியுள்ளது.எங்கே,மக்கள்நலன்சார்ந்த கோசங்கள் எழுகிறதோ அங்கே ஆப்பு வைக்கும் அரசியல் சூழ்ச்சியைப் புலிகள் செய்த வரலாறு நாம் அறிந்ததுதாம்.அன்றைக்கு புளட்டிலிருந்து பிரிந்த “தீப்பொறிக்கு”என்ன நிகழ்ந்ததென்பது பலருக்குத் தெரியும்.அந்தத் தீப்பொறிக்குள் ஊடுரிவிய புலிகள் அதையே மக்களிடமிருந்து அந்நியப்படத்தும் பாரிய செயலுக்காக அந்த அமைப்புக்குள்(குழுவுக்குள்) ஊடுருவி அதையே முற்போக்காய்க் காட்டி உலகத்தின் மூலைகளில் இடம்பெயர்ந்து இலங்கை மற்றும் புலிகளின் மக்கள் விரோதத்தை அம்பலப்படுத்திய முற்போக்காளரை வேவு பார்த்த கதைகளும் ஏராளம்.”தீப்பொறிகள்”உள்நுழைந்த புலி உளவுப்படையானது புலம்பெயர்ந்த மாற்றுக்கருத்தாளர்களைக் கடந்த பதினெட்டாண்டுகளுக்குமுன்பே வேவு பாத்த வரலாறு நீண்டது.இதுதாம் இன்று மாற்றுக்கருத்தாளர்களை-இடதுசாரிகளை கருத்தியில் ரீதியாகத் “துரோகியாக்கும்”பாசிசக்கருத்தமைவுக்கு வழிசமைக்கும் விய+கத்தைப் புலிகளுக்கு இட்டது.இடதுசாரிகளைப் பிளந்து,அவர்களை இந்திய-இலங்கையின் கைக்கூலிகளாக்கியதும், பின் இன்னுஞ் சிலரைப் புலிகளின் எடுபிடிகளாகவும் கருத்துக்கட்டிய விய+கம் புலிகளின் மிகச் சாதுரியமான உளவுத் திறமைக்கே சாத்தியம்.

இன்று தெருக்களில் நின்று தெரு நாயைவிட மிகமோசமாகக் குரைக்கும் மாற்றுக் கருத்தாளர்கள் வந்தடைந்த இறுதியிடம் ஒன்று புலிக்கோ அன்றி அந்நியச் சக்திகளக்கோ சேவை செய்வதில் முடிவடைகிறது.விரல்விட்டு எண்ணத் தக்க தோழர்கள் இன்றுஞ் சளையாது இவர்களை அம்பலப்படுத்தினாலும் அவர்களையும் புலிகள் தமது எடுபிடியாளர்களாக வடிவமைப்பதில் தீவிரமாச் செயற்படுகிறார்கள்.ஆக,மொத்தத்தில் மக்களுக்கான அரசியலை முன:;னெடுக்கும் இடதுசாரிய எண்ணமுடையவர்களைப் ப+ண்டோடு காவுகொள்ளும் படுபிற்போக்கான கருத்தியல் யுத்தமொன்று மெல்ல உருவாகியுள்ளது.இதற்குத் தேசம் இணையம் மிக வசதியாகக் காய் நகர்த்துகிறது.இது இனித் தொடரப்போகும் மக்கள் விரோத அரசியலுக்கு நேரடியான எதிர்க் கருத்து நிலையொன்று உருவாகுவதைத் தடுக்கும் அதேவேளை, மக்களின் சுயாதீனமான முன்னெடுப்பை முடக்குவதாகும்.யுத்தத்துக்கெதிரான மக்களின் சமூக ஆவேஷம் அரசியல் முன்னெடுப்பாகவும் அதுவே போராட்டத் தெரிவை முன்வைத்து அமைப்பாவதையும் தடுக்கும் நரித்தனமான செயற்பாடே இன்று மாற்றுக்கருத்தாளர்களை வலிந்து வீழ்த்திய சதியாக மாறியுள்ளது.இது அழிந்துவரும் இனவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்தி இனவாதத் தீயில் குளிர்காயும் அற்ப இயக்க நலனையும் அதன் இருப்பையும் காப்பதற்கான முன் நிபந்தனைகளில் ஒன்றாகவே உள்ளது.இங்கே இலங்கை-இந்தியச் சதிகளின் மிக விவேகமான பரப்புரைதளமாகப் புலம்பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளின் தமிழ் ஊடககங்கள் பல மாற்றப்பட்டு புலிகளுக்கோ அன்றி அந்நியச் சக்திகளுக்கோ சாதகமான ஊடகங்களாக உருவாகிறது.இதுள் தேசம் நெற்றின் இடம் எதுவென்பது நாம் எல்லோரும் புரிந்துகொள்ளதக்கதே.

இன்றைய அரசியல் சூழ்ச்சிகள் புலம் பெயர்ந்த மக்கள்மத்தியில் மாற்றுக் கருத்தாளர்களைத்”துரோகிகள்”எனும் கருத்தியில் கட்டமைவில் மிக நுணுக்கமாக வீழ்த்தி என்றைக்குமே புலிகளை நியாயப்படுத்தும் அரசியலுக்கு வலுச் சேர்க்கிறது.கணிசமான புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்களை இலங்கை மற்றும் இந்திய உளவுப்படைகளின் முகவர்களாக்கிய கொடூரமான அரசியலுக்கு எந்த அமைப்பின் விவேகம் காரணமென்றால்?அது நிச்சியமாகப் புலிகளே என்பது விடையாக விரியும்.புதிய புதிய தெரிவுகளையும் அதுசார்ந்த குளறுபடிகளையும் ஊக்கப்படுத்திய இத்தகைய அரசியல் சூழ்ச்சி இறுதியில் செய்வது மக்களைக் கொலைக்குத் தயாரிப்பதே.இத்தகையவொரு அரசியலை உடைப்பதாக இருந்தால் முதலில் இலங்கையில் யுத்தத்துக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தாகவேண்டும்.யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு மக்களின் குரல்களுக்கு முக்கியம் கொடுக்கும் ஒரு ஜனநாயகச் சூழலின்றி இலங்கையில் இனங்களுக்கிடையிலான எந்தத் தீர்வும் சாத்தியமாகாது.ஈழத்துக்கான தார்மீக மக்கள் ஆதரவென்பது இனியொரு பொழுதும் சாத்தியமில்லை.மக்களின் அமைதிக்காக- வாழ்வாதாரத் தேவைகளே இதைத் தகவமைத்தது.இதைப் புரிந்துகொண்டு ஈழப்போரை நிராகரிப்பதும் அதே சாக்குவைத்து மக்களை அழிக்கும் இந்திய-இலங்கைச் சதியை முறியடிப்பதும் இன்றைய முற்போக்கு சக்திகளின் தலையாய முதற்கடமையாகும்.இதற்காக புலம்பெயர்ந்த மாற்றுக் கருத்தாளர்கள் தமதுக்குள் ஐக்கியமுறவது அவசியம்.ஆனால்,இந்த ஐக்கியத்தை உடைப்பதில் மக்களின் எதிரிகளின் கைகள் புலம்பெயாந்த மண்ணில் ஓங்கியுள்ளது.இதை மௌனமாக அங்கீகரித்தல் மக்களுக்குச் செய்யும் இன்னொரு துரோகம்தாம்.

 

 

ப.வி.ஸ்ரீரங்கன்

 

12.06.2008

January 15, 2007

மலையகப் பரிசுக் கதைகள்.


January 3, 2007

சமாதானம்,ஜனநாயகம்.

சமாதானம்,ஜனநாயகம்.

உலகம்"சமாதானத்தால் உலகங்களுக்குச் சேவை செய்யட்டும்;"(dem FRIEDEN der Welt zu dienen))என்று பலவிதமான சட்டங்களுடாய் இயற்றிச் சொன்ன பின்பும், அப்பாவி மக்கள் தினமும் பலியாகும் "தாக்குதல் யுத்தம்"நிகழ்ந்தபடியேதாம் முதலாளிகள்-அரசியல்வாதிகள் பொருள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்!கடந்தகாலங்களில் நிகழ்ந்த அனைத்து யுத்தங்களும் இந்த வகைப் பொருள் குவிப்பதின் நோக்கத்தோடு நடாத்தப்பட்டபின் அது மறக்கடிக்கப்பட்டு,இப்போது அதே நோக்கோடு நடைபெறும் சகல யுத்தங்களும் "பயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம்"எனும் பொய்யுரையோடு நடாத்தப்படும் இருண்ட அரசியல் மெய்ப்பாட்டில் மனிதவுயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு வருகின்றன."உள்நோக்கம் நிறைந்த அதற்குத் தோதான பேச்சுவார்த்தைகள் சமாதானத்தோடு இணைந்து வாழும் மக்களின் அமைதியை அழிக்கும்போதும்,பிரத்தியேகமாக தலைமைத்துவம்"தாக்குதல் யுத்தம்"செய்வதற்கான முன் தயாரிப்பைச் செய்வதும் சட்டத்துக்குப் புறம்பானது.இவைகள் தண்டனைக்குட்பட்டதாகும். "(Handlungen,die geeignet sind und in der Absicht vorgenommen werden,das Friedliche Zusammenleben der Voelker zu stoeren,insbesondere die Fuehrung eine Angriffskrieges vorzubereiten,sind verfassungswidrig.Sie sind unter Strafe zu stellen.-Artikel 26 vom grundgesetz der B.R.D.)ஆனால் இத்தகைய முதலாளித்துவ நாடுகள் மக்களை மடையர்களாக்கும் சட்டங்களை இன்னும் மக்களுக்கான நலனோடு சம்பத்தப்பட்டதாகக் காட்டிக்கொள்ளும்போதே தமது வர்க்க நலனைக் காக்கப் போருக்கு மக்களை அணிதிரட்டும் சட்டத்தையும் அதற்கு நேரெதிராகக் கொண்டிருக்கும்போது ,இது மிகக் கேவலமான பித்தலாட்டமாகிறது.

 

"Arikel 87a feststellt,dass der Bund Streitkraefte ausschliesslich zur VERTEIDIGUNG aufstellt.Und dass dies auch eine Wehrpflichtarmee sein kann,dafuer gibt der Artikel 12 a gruenes Licht:>>Maenner koennen vom vollendeten achtzehnten Lebensjahr an zum Dienst in den Steitkraeften…verpflichtet werden.<<என்னவொரு இழிமையான சட்டம்!இத்தகைய சட்டங்கள் சொல்வதென்ன?"ஜேர்மனிய அரச அடிப்படைச் சட்டம் 87அ பிரிவு கூறுகிறது:யுத்தப்படைகளானவை தேசப் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ளது.இது சட்டப் பிரிவு 12அ வினது கூற்றுக்கு பச்சைக் கொடியைக் காட்டி,பதினெட்டு வயதடைந்த இளைஞர்களை கட்டாய இராணுவத்துக்கு ஆட் திரட்டுவதைக் கடமையாக்கிறது. இங்ஙனம் மேலும் கீழும் முரண்பாட்டோடு சட்டங்களை இயற்றி வைத்திருக்கும் நாடுகள் தமது நலன்களை மக்களின் நலன்களாக்கிப் படம் காட்டும் இன்றைய தரணத்தில் ஒடுக்கப்படும் இனம் தனது தலைவிதியைத் தாமே நிர்ணியிப்பதைப் பயங்கரவாதமென்கின்றன.தாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற வன்மம் நிறைந்த பரப்புரைகளால் தமது மனிதவிரோத முகங்களை மறைக்க முனையும் இத்தகைய முதலாளித்துவ நாடுகள்தாம் எமது மக்களைத் தமது கால்களில் கட்டிப் போடுவதற்காகச் சமாதான நாடகம் ஆடுவதும்,முடியாதுபோனால் தமது படைகளை அனுப்பி எம்மைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் இனத்துவ முரண்பாடுகள் தேசியவிடுதலையைக் கோரிக் கொண்டபோது, அதை அங்கீகரிக்க முடியாத அந்நிய தேச நலன்கள் நம்மை வெறும் இனக் குழுக்களாகி,நாகரீகம் அற்றவர்களாக்கிக் குறுக்கி அரசியல் செய்யும் கரவு நிறைந்த அரசியலில்"ஜனநாயகம்"எமக்குக் கற்பிக்கின்றன.இதையும் புலியெதிர்ப்புக் கும்பல் ரீ.பீ.சீ. வானொலியில் கவிதைகட்டி வம்பளக்கின்றனர்.

 

இந்தக் குரங்குகள் உதாரணங்காட்டும் நாடுகள்தாம் மேலே நான் காட்டும் சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.இவர்கள் கூறித்திரியும் "ஜனநாயகம்"அதன் உள்ளடக்கமென்பது இந்தக் கோலமாக இருக்கும்போது, "சங்கரி ஐயா"ஊடாக இலங்கையில் "ஜனநாயகம்" மலரப் போவதாகக் கவிதைபாடும் காகங்களை என்னவென்பது!

 

"
ஜனநாயகம் உயிர்த்தெழும்" ஆம் ரீ.பீ.சீ.க்காரரின் பணப்பெட்டிக்குள் அது தவம் கிடக்கும்போது கட்டாயம் உயிர்த்தெழும்.மக்களை இன்னும் மடையர்களாக்க முனையும் புலிகளைப் போலவே புலியெதிர்ப்பு "மாபியாக்களும்" மக்களை இன்னும் மடையர்களாக்கி வரும்போது, அதற்குத் தலைமை கொடுக்கும் ஜெயதேவன்களோ அல்லது மனிதவுரிமை பேசும் பசீர்களோ மேலே காட்டிய நாடுகளின் பம்மாத்துக்கு ஒத்தூதுவதைத் தவிர வேறொரு மண்ணையும் எமது இனப் பிரச்சனையில் காத்திரமான பங்கை வகிப்பதற்கில்லை.இவர்கள் அந்நியர்களின் நலன்களை இலங்கைக்குள் திணிப்பதற்குதவும் அற்ப மனிதர்கள்தாம் என்பதை நாம் மிகவும் ஆதாரத்தோடு நிறுவ முடியும். எமது மக்கள் இனங்களாகவும்,மதக் குறுங் குழுக்களாகவும் சிதறுண்டு முரண்பாடுகளைக் கையாள முடியாத வெறும் மந்தைக் கூட்டமாகச் சண்டையிட, இந்த இவர்கள் கூறும் ஜனநாயக நாடுகளே முதன்மையான காரணகர்த்தாக்களாக இருக்கும்போது இந்தப்"படித்த அறிஞர்கள்"எங்கள் மக்களுக்குப் "புலிப் பாசிசம்,ஜனநாயகம்"பற்றிப் பாடம் நடாத்துகிறார்கள்.

 

கடந்த சனிக்கிழமை 16.09.2006 அன்று அப்பாவி முஸ்லீம்களை பொத்துவிலில் கொல்லும் அரசியல்தாம் என்ன?

 

இதற்குப் பின் நோக்கம் பெறும் அரசியல் நோக்கு நிலை என்ன?

 

மக்களைக் கூறுபோட்டுக் கொன்று குவிக்கும் கபடம் நிறைந்த உலக நலன்கள் நம்மையின்னும் பயங்கரவாதிகளாக்கி நமது சுயநிர்ணய உரிமையைக் குழிதோண்டிப் புதைக்க முனையும் ஒவ்வொரு நகர்வும் புலிப் பாசிசத்தின் கொடுமையைச் சொல்லி ஒப்பேற்றப்படுகிறது.புலிகளின் நிலையோ அவர்களுக்கே புரியாதவொரு இருண்ட நிலையில் தம்மைச் சொல்லியே எதிரி அரசியலில் வெற்றியடையுந் தரணங்களில் தாமும் பழிக்குப் பழி அரசியலைச் செய்து பழகிய வரலாற்றிலிருந்து விலகி முற்போக்கான அரசியலை முன்னெடுப்பது அவர்களுக்கே ஆபத்தென்பதால்,இத்தகைய ரீ.பீ.சீக் கும்பல் நனைந்த இடத்தில் குழி தோண்டுகிறது.

 

உலக அரசுகளின் அடிபடைச் சட்டங்கள் வன்முறைப்படைகளால் "ஜனநாயகம்" காக்கப்படுமென்று ஒப்புதல் வழங்கும்போது இது குடிசார் உரிமைகளுக்கு எதிராகத் தனது நிலையை எடுக்கிறது.சிவில் சமூகம் என்ற இந்த அரசியல் வார்த்தையே ஜனநாயகத்தின் பொய்மைத் தன்மையில் கானல் நீரகவே இருக்கிறது.இந்த ஜனநாயகம் என்பது ஆதிக்க சக்திகளின் அற்பத் தனமான கனிவளச் சுரண்டலுக்கும்,தமது நிதி மூலதனத்தைக் காப்பதற்கும் தொடர்ந்து தமது ஜந்திரங்கள் இயங்குவதற்கான முறைமைகளில் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப்போடுவதற்குமாக அர்த்தம் பெறுகிறது.இதனால்தாம் நாம் "ஜனநாயகம்"என்று இவர்கள் பிதற்றும் இந்தச் சாமான் போலியானது, மக்கள் தமது இறைமைகளைக் காப்பதற்காக புதிய ஜனநாயகத்தை நிறுவும் புரட்சியை முன்னெடுக்காத வரை இது சாத்தியமில்லை என்கிறோம்.இத்தகைய தரணங்களை மறுத்தொதுக்குவதற்கு இந்தவுலகத்துக்கு எந்த நியாயப்பாடுமில்லை.

 

இலங்கையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் "புலிகளின் பாசிசத்தை" மையப் புள்ளியாக்கும் இந்தப் புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கு உலகமே புலிகளுக்குள் அடங்குவதாகப் பிரமை தட்டுகிறாதா அல்லது திட்டமிட்டு மக்களை இத்தகைய மக்கள் விரோத அரசியலால் காவுகொள்வது நோக்கமா?

 

உண்மையில் இத்தகைய நரித்தனமான மனிதர்கள் திட்டமிட்டுத் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளோடு விளையாடுகிறார்கள்.இவர்கள் அந்நியச் சக்திகளின் நலனுக்காக வளர்தெடுக்கப்பட்டு வேட்டைக்கு அனுப்பப்பட்ட வேட்டை நாய்கள்.இவர்களிடம் பொதிந்திருக்கும் மக்கள் நலன்கள் என்ற கபடம் நிறைந்த விய+கங்கள் முற்றிலும் ஆதிக்க சக்திகளின் ஆர்வங்களின் மிகப் பெரும் தந்திரோபாயத்துடன் சம்பந்தப்பட்டது.இதை மக்கள் புரியதிருக்கவே "புலிப் பாசிசத்தின்" அனைத்துப் பரிமாணங்களும் நம் முன் கொட்டப்பட்டு,ஊதிப் பெருக்கப்படுகிறது.புலிகளினது நலத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் தேசிய இன முரண்பாடானது புலிகளைச் சிதைப்பதால் தோற்கடிக்கப்பட்டுவிடுமென்பது இல்லை.இது அந்நிய சக்திகளுக்குத் தெரியும்.இத்தகையவொரு புற நிலை யதார்த்தமே இவர்களுக்கு அவசியமாக இருப்பதால், இந்த முரண்பாடுகள் இன்னொன்றின் மூலவ+ற்றுக்குக் காரணமாக இருப்பதற்கான இன்னொரு தளத்தை உருவாக்குவதில் இலக்கைக் கொண்டிருக்கிறது.

 

கூடவே இப்போது "ஆயுதங்கள் மக்களைக் கொல்வதில்லை.மனிதர்களே மக்களைக் கொல்கிறார்கள்.ஆயுதங்கள் மக்களைக் காப்பதற்கானது".எனும் மக்கள் விரோத ஏகாதிபத்தியக் கருத்தானது, இத்தகைய நோக்கு நிலையின் இன்னொரு வடிவமாகும்.இது தமது இருண்ட பக்கங்களான குவிப்புறுதிப் பொருளாதார முன்னெடுப்பின் வாயிலான அனைத்து வகைக் காரணிகளையும்,அது யுத்தமானதாக இருந்தாலென்ன அல்லது உயிர்கொல்லி ஆயுதத் தயாரிப்பானதாக இருந்தாலென்ன அனைத்தும் ஜனநாயகத்துக்கு உட்பட்ட மக்கள் நலனின் வெளிப்பாடாக்க முனைகின்றன.இதையும் வாந்தியெடுக்கும் தேனியின் அர்சுனனுக்கு தமிழ் மக்கள் இன்னும் விட்டேந்திகள்தாம்.

 

 

 

.வி.ஸ்ரீரங்கன்

24.09.2006

January 2, 2007

நம்மை ஏமாற்றும் அரசியல்.

நம்மை ஏமாற்றும் அரசியல்.

 

இது மக்களை ஏமாற்றும் காலம்.மக்களின் உரிமைகளைச் சொல்லியே அரசியல் இலாபம் பெறும் கட்சி அரசியலானது என்றும் மக்கள் நலன் சார்ந்த ஜனநாயக அடிப்படைப் பெறுமானத்தை மதிப்பதுகிடையாது.இன்றைய அரசியல் சமூகத்தின் அதீத அவநம்பிக்கையை உண்டுபண்ணியபடி காலத்துக்குக் காலம் மிதமான பொய்யுரைப்புகளை மக்கள்-சமூக வெளிக்குள் கொட்டி நடைமுறைப் பிரச்சனைகளைப் பின் தள்ளுகிறது.இங்கே நாம் கட்சி-தலைவர் என்றபடி கருத்தாடுவதும், அல்லது அத்தகைய அமைப்புத் தலைமை வாதத்துக்குள் நமது கருத்து நிலையைக் காவு கொடுத்து, மக்கள் நலன்களைப் பலியாக்கும் பொறுப்பைக் கட்சிகளிடம் ஒப்படைக்கின்றோம்.

 

ஒரு இனத்தின் நலனை முன்வைத்து,அந்த இனத்தின் உயிராதார உரிமைகளை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டமென்பது அந்த மக்களின் நலனைத் தழுவிய நோக்கத்திலிருதே முன்னெடுக்கப்பட வேண்டும்.ஆனால் பழைய அரசியல் கட்சிகள்,அதன் தலைவர்கள் தமது கட்சி நலனை முதன்மைப்படுத்தி அதையே மக்களின் அபிலாசையென்னும் சொற் சிலம்பத்தால் ஏமாற்ற முனைதல், இன்றைய இலங்கையரசியலில் மிக இலகுவாக நடைபெறுகிறது.

 

தமிழ்பேசும் மக்கள் தமது சமூக முரண்பாட்டை பல் வகைப் போராட்ட நெறியாண்மைக்குள் பரிசோதித்துப் பார்த்த பின்பு,மீளவும் பழைய பரிசோதனைப் பாணி அரசியல் சழற்சிக்குள் தள்ளிவிடப்படும் ஒரு இருண்ட அரசியல் விய+கத்தைப் பழைய அரசியல் பெரிச்சாளிகள் அந்நிய அரசியல்-பொருளியல் ஆர்வங்களின் துணையுடன் திட்டமிட்டுச் செயற்படுத்தும்போது,அதை வெறுமனவே பார்வையாளர்களாக நாம் எதிர்கொள்ள முடியாது.நமது வாழ்வையும் நமது அரசியல் அபிலாசைகளையும் இந்தியாவும்,அமெரிக்காவும் தீர்மானிக்க முடியாது.தமிழ்பேசும் மக்களிடமிருந்து அத்தகைய அரசியல் எதிர்பார்ப்பு எழும் இருண்ட அரசியல் வறுமை என்றைக்கும் நிலைத்திருப்பதற்கானவொரு விய+கத்தை கட்சி அரசியலானது நமக்குக் காலாகாலமாகத் தந்துவிடத் துடிக்கிறது.இதைச் செம்மையாகச் செய்வதற்கான கருத்தியல் மேலாதிகத்தை உருவாக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்திய-அந்நிய ஆர்வங்கள் எமது மக்களின் உரிமைகளைத் திட்டமிட்டு அழித்தும்,தமது விருப்புறுதிகளை-பொருளாதார மற்றும் அரசியல் இலாபங்களை எமக்கான உரிமையாகவும்,எதிர்கால அரசியல் தெரிவாகவும் முன்வைக்கின்றன.இவை முன்னெப்போதையும்விட பன்மடங்கு அரசியல் குழிபறிப்புடைய ஈனத்தனமான செயற்பாடாகும்.

 

எங்கள் மக்களுக்குள் நிலவும் பாரிய அரசியல் இயலாமையை தமது வெற்றிக்கான அரும்பாகப் பயன் படுத்தும் இந்திய விருப்பு,இலங்கைக்குள் இந்திய நிலைமைகளைத் தோற்றுவிக்கப் படாத பாடு படுகிறது.அதற்காக ஆனந்தசங்கரி போன்ற அரசியல் அநாதைகளைப் பயன்படுத்தும் இன்றைய அரசியலானது மிகவும் சூழ்ச்சி;மிக்க பரப்புரைகளை நமக்குள் விதைக்கின்றன.

 

நமது மக்களின் துயரம் மிக்க போராட்ட வரலாறானது தியாகத்தாலும்,கொலைகளாலும்,பொருளிழப்பாலும் நிறைந்த மிகக் கடினமான போராட்ட வாழ்வாகும்.எம்மை வேரோடு சாய்ப்பதற்கான பல்வகை அரசியல்-போராட்ட விய+கங்களை இலங்கையரசும்,இந்திய மற்றும் அமெரிக்க நலன்களும் திட்டமிட்டுப் பயன்படுத்தி வருகின்றன.இத்தகைய தரணங்களுக்கிசைவாகப் பயன்படுத்தப்படும் தமிழ் அரசியல் வாதிகள் எப்போதுமே தமிழ்பேசும் மக்களை ஒட்டச் சுரண்டித் தமது அற்ப ஆசைகளைத் தீர்த்துக்கொண்டிருப்பவர்கள்.

 

இந்த இழி அரசியல்வாதிகளால் ஒரு தலைமுறையைப் பலி கொடுத்த இலங்கைத் தேசத்துத் தமிழ்பேசும் மக்கள், வரலாற்றில் அரசியல் தோல்வியை மடமையான முறையில் சந்திக்க முடியாது.

 

எமது மக்களின் உயிரிழப்புகளுக்குக் காரணம் தேடிப் புதுப்புது விய+கங்களை நம் எதிரிகள் எமக்குள் கொட்டி எம்மைத் தமது நலன்களைக்காக்கும் ஜந்திரங்களாக்கி, அரசியல் அநாதையாக்கும் பணிக்கு ஆனந்த சங்கரிபோன்ற அரசியல் வாதிகள் பக்கப்பலமாகச் செயற்படுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.இது மக்களைப் பழையபடி விலங்கிட்டு அவர்களது உரிமைகளை அந்நிய சக்திகளுக்கு ஏலமிடும் பாரிய சமூகவிரோதச் செயற்பாடாகும்.

 

இன்று நமக்குள் நிலவும் ஜனநாயகப் பற்றாக் குறையை மிகைப்படுத்தி நமது மக்களுக்கு இந்தத் தேவையே அவசியமென்றும,; அதை இலங்கை அரசுடன் உடன்பாட்டுக்குப்போய் தீர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறப்படும் ஆசை வார்த்தைகள் பொய்யானவை.தென்னிலங்கையின் ஜனநாயகச் சூழலானது தமிழ் மக்களின் நிலையிலிருந்து எந்த வகையிலும் முன்னேறியது கிடையாது.இந்த இலங்கை அரசியலைத் தீர்மானிக்கும் உலக அரசுகள் எமது நாட்டில் நிரந்தரமானவொரு அரசியல்-பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்தையும், சுய உறுதிப்பாடுகளையும் எட்டுவதற்கு என்றும் விருப்புடையனவாக இருக்கவில்லை.இவர்கள் எமது வாழ்வை தமது அரசியல் நலனிலிருந்து தீர்மானிக்க முனைகிறார்கள்.

இதனால்-

 

"
இந்தியா தராது","இந்தியாவிடாது",

 

"
அமெரிக்கா விரும்பாது",

 

"
ஐரோப்பா ஏற்காது"

 

என்று பயனை பாடிக் கொள்ளும் கருத்தியலை எமக்குள் வலவாகத் திணித்து நம்மை அவர்கள் வழிக்குத் தயார்ப்படுத்தி வருகிறார்கள்.இதற்காகவே பல மில்லியன் டொலர்களைச் செலவு செய்து பாரிய பரப்புரைகளை நமக்குள் கொட்டுகிறார்கள்.நாம் இன்னும் விடு பேயர்களாய் இருந்து, இவர்களிடம் மடிப் பிச்சை எடுக்கும் அரசியல்-சமூக உளவியலைத் தீர்மானிக்க எமக்குள் பற்பல விய+கங்கள் மலிந்துருவாக்கப்படுகிறது.

 

இது ஜனநாயகம்,

 

யுத்த நிறுத்தம்,

 

சிறுவர்களைப் படையில் இணைப்பது,

 

கட்டாய வரி வசூலிப்பு,

 

கொலைகள்,

 

மானுடவுரிமை,

 

 

என்ற கோசங்களுக்கூடாய் நம்மை வந்து முற்றுகையிடுகிறது.

 

உண்மையில் நமக்கு இந்த அரசியல் விழுமியங்கள் அவசியமாகவுள்ளது.

 

நமது சமுதாயத்துக்குள் இத்தகைய முரண்பாடுகள் மலிந்துவிட்டென.

 

எனினும் இதைத் தூக்கி நிறுத்தம் அரசியலானது மக்கள் நலனிலிருந்து மக்களே தீர்மானிப்பதாய் இருக்கவேண்டும்.ஆனால் இப்போது நிலவும் இந்தக் கோசங்களுக்குள் மறைந்திருக்கும் அந்நிய ஆர்வங்கள் நம்மை நன்றாக ஏமாற்றிவிடத் தடியாய்த் துடிக்கின்றன.

 

யுத்தத்தின் மூலம் நமது ஆன்ம வலுவை உடைத்தெறிந்துவிட்டு,நம்மை நாதியில்லாத அகதிகளாக்கிவிட்டு,நமக்கு அன்றாடம் இயல்பான வாழ்வே அவசியமெனும் மனநிலையைத் தோற்றி, நமது உரிமைகளைக் காயடிக்கும் இலங்கை-இந்திய அரசிலானது மிகவும் கொடிய உள்நோக்கமுடைய அரசியல் குழிப்பறிப்பாகும்.இது பேசும் இத்தகைய "மர்ம மக்கள் நலனானது" நம்மைக் காலாகாலத்துக்கு அடிமைகளாகக் கட்டிப்போடும் தந்திரத்தோடு உறவுடையது.

 

எனவே இதை உடைத்தெறிவதற்கான ஒரே வழி:

 

புலிகளுக்கும் மக்களுக்குமுள்ள மேற்காணும் முரண்பாட்டை தீர்ப்பதே.இதைப் புலிகள் செய்யும் போது,மக்கள் சுய எழிச்சி கொள்வதும்,தமது நலன்களைத் தாமே "தமது நோக்கு நிலையிலிருந்து" முன்வைப்பதும்,போராடுவதும் நிகழும்.எந்த அந்நிய சக்தியாவது புலிகளை அழிக்க முனையும்போது மக்கள் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதும் தவிர்க்க முடியாது நிகழும்.அதுதாம் நமது நிலைப்பாடும்.மக்களைத் தவிர்த்த எந்த அரணும் போராளிகளைக் காக்க முடியாது.மக்கள் தம்மைத் தாமே முன்னிறுத்தும் பாரிய வரலாற்றுப்பணி இப்போது நம் முன் இருக்கிறது.இதைத் தடுக்கும் அரசியல் சூழ்ச்சியானது புலிகளுக்கும் மக்களுக்குமான ஜனநாயக முரண்பாடாகக் கட்டி வளர்க்கப்படுகிறது.இதைப் புலிகளே பிரித்தறிந்து நிவர்த்திசெய்யாதவரைப் புலிகளின் போராட்டச் செல் நெறி மக்களையும்,அவர்களது உரிமையையும் வென்றெடுக்க முடியாது.

 

 

.வி.ஸ்ரீரங்கன்

31.09.2006

என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது.

என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது.

(சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)"……………………." …

ம்இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து"ஓடுங்க நாய்களே"என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும் இனித்தோன்றும் என் அடுத்த பிறப்புக்காகவும் நான் வதைப்பட்டதும்,படுவதும்-படப்போவதும் குறித்துப் பேசுவது அவசியமில்லையா?

 

பேசவேண்டும்!

 

தர்மம் செய்கிறோமெனும் பேர்வழிகளில் நானும் ஒருவனல்ல.கையேந்தும் ஒரு சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களில் ஒன்று நான்.எனது மனவலியும்,வடுவும் என்னைப் பல முறைகள் மீரா நாயரைப் பார்க்க வைத்தது.அவர் திறந்து காட்டிய என் வாழ்வை, நான் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.எனது சின்னக் கனவின் வண்ணங்களைச் சொன்னதால் மீரா நாயரை மனதுக்குள் அதிகம் நேசித்த காலம் அதிகம்.இளைமைக் காலத்தின் அற்புதமான கனவுகள் எல்லோருக்கும் ஒன்றல்ல.

 

கிருஷ்ணாவுக்கு வீட்டுக்குப்போகவேணும்!அம்மாவைப் பார்க்கவேணும்.

 

கடைகளில் தேனீர்க் குவளை தாங்குகிறான்.பணம் சேர்க்கிறான்.ஏதோவொரு முடுக்கு வீதியில் அநாதவராக எழுந்திருக்கும் சுவருக்குள் ஒரு பொந்து!நண்பன் அதைப் பெட்டகமாகவும்-வங்கியாகவும் அறிமுகப் படுத்துகிறான்.கிருஷ்ணாவின் சின்னவிரல்கள் சேர்த்த பணம் அம்மாவுக்கு,அப்படியே வீட்டைபோவதற்கு.பொந்துக்குள் பணம் பத்திரமாக வைக்கப் படுகிறது.

 

தொடர்ந்து இயங்கிய சின்னக்கால்கள் ஒரு முறை பொந்தைப் பார்த்தபோது பணம் மாயமாக மறைந்துவிடுகிறது.

 

உலகம் இருண்டு விடுகிறது!மனம் வலியெடுக்கிறது எனக்கு.எங்கேயடா எனது பணம்?

 

கேட்டேன்.

 

உதைத்துத் தள்ளுகிறான் நண்பன்.

 

"
நான் வீட்ட போகணும்,வீட்டை போகப் போறேன்."பணம் போனது போனதுதாம்.

 

எனக்கு எழுத வராது.

 

வீதியில் அமர்ந்து "அதை" மக்களுக்கு நிறைவேற்றும் ஒரு அண்ணரிடம் கடிதம் எழுதுவிக்கிறேன்.

 

"
அன்புள்ள அம்மா,…" கடிதத்தில் என்னைக் கொட்டி கவருக்குள் திணித்து மூடிய பின், முகவரி எழுதுவதற்கு அந்த அண்ணர் "என்னடா உன்ர வீட்டு அட்றஸ்?"…ம்

 

தெரியாது!

 

தெரியாது.அம்மாவை,அப்பாவை,அன்புடைய சகோதரத்தைத் தெரியாத முகவரியால் நான் தொலைத்தேன்.

 

என்னோடு உலாவும்-வாழும் எல்லோரும்தாம்.

 

மஞ்சுவுக்கு ஒரு அம்மாவும்,பல அப்பாக்களும் இருப்பது தெரிந்திருக்கு.அவள் அம்மாவோடு இருப்பாள்.பொழுதுகளில் என்னோடு உலா வருவாள்.

 

நாங்கள் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம்.

 

எங்கள் கதைகளில் நாங்களே நாயகர்கள்.எனினும் எங்களுக்கும் ஸ்ரீதேவியைக் காதலிக்கவும் தெரியும்.தெருவில் அமிதாப் பச்சனாக வாய்விட்டுப்பாடவும் தெரியும்.

 

 

ஒருநாள்,ஒருநாள் என்னப் பல நாள் பொலிசினால் நகரத் தூய்மை-அழகு கருதி நகருக்கு அப்புறமாகத் துரத்தப்படுவதும் உண்டு.நாங்கள் மீளவும் நகரத்துக்குள் கால் வைப்போம்.

 

எங்கே போவோம்?

 

இந்தியாவின் கதாநாயன் கிருஷ்ணன்!

 

ஆனால் இந்தக் கிருஷ்ணாவுக்கு தாயுமில்லை,தந்தைத் தேசமுமில்லை.வீதியின் விளிம்பில் படுத்துறங்கும் நாம்,சமூகத்தின் உள்ளேயும் வாழ முடியாது விளிம்பில்தாம்.

 

ஆம்! நாங்கள் விளிம்பு மனிதர்கள்.

 

"
சலாம் பம்பாய்"-மீரா நாயர்.

 

"
என்ன பிரச்சனை?,ஒரு பிரச்சனையுமில்லை!" -மீரா நாயர்.

 

வெண்திரை மூடி விடுகிறது.

 

மீளவும்,மீளவும்ஒரு அறுபது தடவைகளுக்கு மேலே இந்தச்"சலாம் பம்பாய்"க்குள் வாழ்ந்திருக்கிறேன்.அதனால் எனது பையனுக்கு"கிருஷ்ணா" என நாமமும் இட்டேன். அந்தக் கிருஷ்ணா அநாதையில்லை என்பதற்காக நான் கிருஷ்ணாவுக்குப் பெற்றவனாய்இது நிஷம்!வாழ்வு இப்படித்தாம் மனதுள் விரிகிறது.வசந்தத்தை நாம் வடிவமைப்பதிலும்,வாழ்வதிலும் இணைத்துவிடுகிறோம்.

…………………………………………………………………………………………………………………………………………………………….

 

 

சுய உணர்வும்,சுய நம்பிக்கையும் சமூகத்தின் அனைத்து ஆளுமைக்கும் அடிப்படைக் காரணியாகும்.மனித சமுதாயத்தில் அநேகமாகப் பல குழந்தைகள் அச்சத்தைத் தரிசிப்பவர்கள்.சமூகப் பாதுகாப்பற்ற ஒரு மொன்னைத்தனமான ஆட்சி,நிர்வாகக் கட்டமைப்பு உலகத்துள் நிலவுகிறது.இங்கே மனிதவுணர்வுகள் இயந்திரத்தனமான மனதுகளுக்குள் பின்னப்பட்டிருக்கிறது.இது சமூகத்தின் மொத்த மறுவுற்பத்தியையும் பாழடித்தபடி, பொருள் உற்பத்தியின் திறனைத் தினம் உயர்த்துவது எப்படியெனச் சிந்திகிறது.இந்தவுலகத்தில் துண்டாடப்படும் மனித ஆற்றலானது எந்தக் காரணத்துக்காகவும் புரிந்து கொள்ளப்படுவதில்லை.இது தாரளமயமான ஜந்திர வடிவத்துக்குள் உலகைத் தரிசனம் செய்யுந் தரணங்களில் தகவமைக்கும் மானுட மாதிரியானது மேலே வரும் வாழ்வைத் தினம்,தனம் மெருக்கேற்றி வளர்த்தெடுக்கிறது.

 

 

இன்றைக்கு மானுடத்திடம் சுய பெறுமானாவுணர்வு குறைந்துவிட்டது.சுயமதிப்பென்பது மானுடத்தின் ஆளுமையை விருத்திக்கிட்டுச் செல்வது.அது மனித ஆற்றலைத் தீர்மானிப்பதும் அறிவை மேம்படுத்திப் பல நல்ல சமூக மனிதர்களை உலகத்துள் வாழத் தருவதுமாக மறு உற்பத்தி இயங்குவதன் ஆதார சுருதியாகும்.இந்தச் சுயமதிப்பு சமுதாயத்தின் மொத்த உற்பத்திச் சக்திகளின் தனியுடைமையில் ஒருசில மேட்டுக் குடிகளுக்கான வரையறையாக மாற்றப்பட்டுள்ளது.இவர்கள் தவிர்ந்த சமூகத்தின் மற்ற மனிதர்கள் யாபேரும் இந்தச் சமுதாயத்தின் ஏதோவொரு விளிம்பில் தொங்குகிற ஒட்டுண்ணிகளாகச் சமூக யதார்தத்தம் உருப்பெற்றுள்ளது.இது சமுதாயத்தின் கடமையைச் சரிவர இயக்க முடியாது ஆட்சியையும்,அதிகாரத்தையும் ஏற்படுத்திவைத்திருக்கும் ஆளும் வர்கத்தின் அரசியலானது இந்தவுலகத்தில் கிட்டத்தட்ட 100 மில்லியன்கள் குழந்தைகளை வீதிக்கு உதைத்துத் தள்ளியுள்ளது.இந்த ஈனத்தனமான பொருளாதார இலக்கானது மனிதர்களில் இப்படி மனிதக் குப்பையாக சமூகத்தின் ஒருபகுதித் தலைமுறையைத் தனது கழிவாக்கி வைத்திருக்கிறதென்றால் இந்த ஆட்சி,அமைப்புகள் எவ்வளவு மனிதக்கொடுமைகளைச் செய்கிறது!இதைக் கடைந்தெடுத்த துரோகத்தனமென்பதா இல்லை பயங்கரவாதம் என்பதா?

 

இது பயங்கரவாதமே!

 

மனிதக் கூளங்களாக நூறு மில்லியன்கள் குழந்தைகள் உலகமெங்கும் வீதியில்கிடந்து உழல இந்த மனித சமுதாயமும்,அதன் பெருந்தலைவர்களும் அமைதியாகக் "கனவு காணுங்கள் இளைஞர்களே"என்கிறார்கள்!

 

எதைப்பற்றிக் கனவு?

 

கோடிக்கணக்கான குழந்தைகளை எங்ஙனம் வீதிக்கனுப்புவதென்றா?

 

வீதிகள்தோறும் மனிதக் கழிவாகக் குழந்தைகளைக் கொட்டிவைத்திருக்கும் தேசங்கள் வீராப்போடு போர்கள் செய்கின்றன!

 

இன்றைய அரசுகள்-நிறுவனங்கள் விண்ணுலகத்துக்கு ரொக்கட்டுகளைச் செய்மதிகளை பல கோடிக்கணக்கான நிதியிட்டு அனுப்பிவைக்கின்றன.ஆனால் அப்பாவி மனித ஜீவன்களுக்கு ஒருபடி உணவளிக்கமுடியாது,தேசத்துக் குழந்தைகளைச் சமுதாயத்தின் விளிம்பில் உந்தி தள்ளி அவர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டித்தனமாகப் பறிக்கின்றன.இது கொடுமையில்லையா?,கோபம் வரவேண்டாமா?எத்தனை காலத்துக்குத்தாம் மற்றவர்களைக் காறித் துப்பிப் பழகப்போகிறோம்!இந்தக் குழந்தைகள் நம்மில் ஒரு அங்கமில்லையா?

 

நடுவீதியில் பத்திரிகைத் துண்டு பொறுக்கி,கழிவுக்குள் உணவு தேடித் தேசத்தின் குழந்தை அவலப்பட நாம் வல்லரசுக்கனவு காண்போமா?வந்திடுமா தன் நிறைவு?தந்திடுமோ இந்தத் தேசம் தக்கவொரு வேலை?கிடையாது!

 

உலகப் பொருளாதாரப்போக்குகள்,அதன் காடைத்தனமான சுரண்டல்,மற்றும் நிதிமூலதனத்தின் கண்ணைப் பொத்தியடிக்கும் வட்டி,அந்த வட்டிக்கு வட்டி இப்படி நிதியை வைத்திருப்பவர்கள் செல்வத்தில் புரண்டொழும்ப,உலகத்துச் செல்வமெல்லாம் இவர்கட்கே சொந்தமெனும் மோசடி அரசுகள்-சட்டங்கள்.இவற்றைப் பொறுத்தே பழகுவெனக் கல்வி,நிர்வாக ஒழுங்கு,சட்டம்,நீதிமன்றம்,பொலிசு,இராணுவமென்று பற்பல ஒடுக்குமுறைகள் விலங்கிட அப்பாவிக் குழந்தைகள் அநாதையாகிக் கண்முன்னே செத்து மடிகிறார்கள்.

 

கடைந்தெடுத்த யுத்தங்கள்,கண்மண் தெரியாத போர்களின் காட்டுமிராண்டிக் குண்டுகள் எத்தனை வகையான துன்பத்தைச் சிறார்க்கு வழங்கி விடுகிறது!

 

1830
இல் உலக வல்லரசு பிரித்தானியாவிலேயே 30.000. அநாதைக் குழந்தைகள் பெற்றோர்கள் இன்றி வீதிக்கு வந்தார்கள் என்கிறது ஒரு அமைப்பின் பிரசுரம்(terre des hommes)..ஆனால் அது இந்தக் காரணத்தாலல்ல.சமுதாயத்தில் எங்ஙனம் வறுமை தோன்றுகிறதென்பதும்,குழந்தைகளின் பெற்றோர்கள் எங்ஙனம் இணைந்து வாழ முடியாதுபோனது அல்லது குழந்தைகளைச் சமுதாயத்தின் பொது உயிரியென்ற வகையில் அவர்களைக் காக்க அரச முயலவில்லையென்பதையும் வெறுமனவே பெற்றோர்கள் இன்மை என்பதற்குள் அடக்கி, உண்மைகளை உருத்தெரியாமல் அழிப்பது இந்தச் சமூக அரசியலுக்குப் பழக்கமாகிறது!இதுதாம் முதலாளியத்தின் தப்பித்தல்.முதலாளியத்தில் இந்தப் பிரச்சனை தவிர்க்க முடியாது தொடர்ந்தே இருக்கும்.வேலையில்லாத் திண்டாட்டத்தைப்போன்று!

 

ஆண்டுதோறும் கடலில் கொட்டும் கோதுமையும்,பழங்களும்,மற்றும் பல்வகைத் தானியங்களும் இந்தவுலகத்திலுள்ள அனைத்து மானுடர்களும் ஒரு மாதத்துக்கு உணவருந்தப்போதுமானது.பல இலட்சம் கோடி டொலர் மதிப்புள்ள விளை பொருட்களைச்"செயற்கைத்தனமான அழிப்பு"எனும் சந்தை விதி வார்த்தையில் நாம் அழைத்துக்கொள்கிறோம்.இவையாவும் எதன்பொருட்டு?முதலாளியத்தின் "சந்தைப்படுத்தல்-மதிப்பிறக்கத்தைத் தணித்தல"; எனும் தந்திரத்தின்-உத்தியின் விளைவல்லவா?

 

இன்றைய நிலவரப்படி 100 மில்லியன் வீதிக்குழந்தைகள் இந்த உலகத்தில் செத்துக்கொண்டிருக்கிறார்கள்!(தரவு:Weltgesundheitorganisation WHO.)இலத்தீன் அமெரிக்காவில் மட்டும் முப்பது மில்லியன் வீதிக் குழந்தைகள் வாழ்கிறார்கள்.பிரேசில்போன்ற உலகின் மிக ஏழ்மையான நாட்டில் ஏழு மில்லியன்கள் குழந்தைகள் வீதியில் கையேந்தும்-கண்ணயரும் நிலை.

 

 

வளர்ச்சியடைந்த ஜேர்மனியானது உலகத்தின் எந்த நாட்டையும்விட மிக முன்னேறிய சமூகப் பாதுகாப்புடையது.அதன் மண்ணிலே அண்ணளவாக 40.000. வீதிக் குழந்தைகள்,தெருவினில் சீவித்துச் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அமெரிக்காவென்ன ஜப்பானென்ன முதலாளியத்தின் மூச்சு எங்கே நிலவுகிறதோ அங்கெல்லாம் குழந்தைகள் வாழ்வைத் தொலைத்துத் தெருவுக்குத் துரத்தப்படுகிறார்கள்.

 

 

"
இராஜசிறீ பன்சிவார் கூறுகிறார்:":"Viele Leute meinen die beste Hilfe fuer diese Kinder waere,sie zuruek zu den Eltern zu schicken oder bei wohlhabenden Leuten unterzubringen.Das ist eine Illusion aus den Filmfabriken"-Voluntary Organisation in Community Enterprise-VOICE."இக் குழந்தைகளை பெற்றோர்களுடன் அல்லது வளம்மிக்க மனிதர்களிடம் மீள அனுப்பிவைப்பதே சாலச் சிறந்ததெனப் பல பேர்கள் எண்ணுகிறார்கள்.ஆனால் இது ஒரு மாயை சினிமாவால்."

 

இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மில்லியன்கள் குழந்தைகள்-பெரியவர்கள்,பெற்றோர்கள்-குடும்பங்கள்; முற்றுமுழுதான அநாதைகளாகத் தெருக்களில் அலைகிறார்கள்.

கனவுத் தொழிற்சாலைதாம் இவர்களின் கனவுகளுக்கு வடிகாலாக இருக்கிறது.இந்த தொழிற்சாலை இச் சிறார்களை- இளைஞர்களை இரண்டும் கெட்டான் நிலைகிட்டுச் சென்று எவருடனும் இணைய முடியாத அகப் புறநிலைக்குள் தள்ளி விடுகிறது.மில்லியன் கணக்காகக் குழந்தைகளையும்,பெற்றோர்களையும் தெருவுக்கு விரட்டியடித்த இந்தியப் பொருளாதாரமானது இப்போதுதெல்லாம் வல்லரசுக்கனவு காண்கிறது.

 

இவையனைத்தும் இந்த முதலாளித்துவப் பெரும் சுரண்டலினால் தொடரப்படும் பயங்கரவாதமாக இனம் காணப்பட வேண்டும்.

இத்தகைய அரசியல் பொருளாதாரப் பயங்கரமானது இன்னும் சில தரணங்களில் பல மாவட்டங்களில் மனிதர்களைக் கிருமிகளிடமிருந்து காக்காது கொன்றுவிடும் திட்டம் வைத்திருக்கின்றது.சனத்தொகை இங்ஙனம் குறைப்பதற்கானவொரு பொருளாதாரப் புள்ளி இனத்துவ அடையாளப்படுத்தலுடன் நகர்ந்துகொண்டிருப்பதும் இங்கே கவனிகத் தக்கது.

 

எனவேதாம் கூறுகிறோம் இவ்வுலகம் மாற்றப்படவேண்டுமென.

 

 

 

.வி.ஸ்ரீரங்கன்

02.09.2006

பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி…

பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி…emoticon

இன்று, எழுதக்கூடியளவுக்கு ஒரு மரணம் என்னைத் தூண்டுகின்றது.கடந்த இரு கிழமைகளாக வைத்தியசாலையில் நான்.எனது தொண்டையில் அறுவைச் சிகிச்சை மூலமாக ஒருவித நோயைக் கட்டுப்படுத்திய பின் மீளவும் எழுதக்கூடிய நிலையில் நான் இல்லாதிருப்பினும்,இந்த மரணம் மிகவும் பாதிப்பைத் தருகிறது.

 

கடந்த 09.12.2006 இல் எனது கிராமத்தின் அதியற்புதக் கவிஞன,; சு.வி.என்ற சு.வில்வரெத்தினம் அவர்கள் அற்ப வயதில் காலமாகியுள்ளார்.இவரின் இழப்பானது ஈழத்துத் தமிழ் இலக்கியவுலகுக்கு மிகவும் ஈடுசெய்ய முடியாத இழப்பென்பது எனது கருத்து.தேசத்தில் எத்தனையோ கொடுமைகள் நிகழ்ந்துவிட்டன!இந்தக் கொடுமைகள் எல்லாம் எழுத்தில் வரமுடியாதளவுக்குக் காரணகாரியங்கள் மலிவுற்றுக் கிடக்கின்றன.இத்தகைய இடருக்குள்ளிருந்துகொண்டு-நெற்றிக்கு நேரே நிமிர்ந்து நிற்கும் துப்பாக்கியைத் தரிசித்தபடியே தமது குரலைப் பதிவிடவேண்டிய ஈழத்துச் சூழ்நிலையில், எவரொருவர் உருப்படியாக எழுதமுடியும்?எனினும் சு.வி. தன் அகத்தைப் பற்றவைத்துக்கொண்டு இந்தச் சூழலைத் தரிசித்திருக்கிறார்.அவரது படைப்புகள்மீதான விமர்சனங்களுக்கப்பால் அவர் மனித அவலங்களைப் பாடிய பாங்கு அளப்பெரியது.நம்பிக்கையையே அவர் மூலதனமாக்கியிருக்கிறார்.படைப்பின் உறுதிபோலவே நம்பிக்கையால் கட்டப்பட்ட வலுவான அத்திவாரமாக அவர் வாழ்ந்தும் இருக்கிறார்!-மறைந்தும் போய்விட்டார்!!

 

எங்கள் கிராமத்தின்(தீவின்) இடப்பெயர்வே ஈழத்தின் அனைத்து இடப்பெயர்வுக்கும்,வலிகளுக்கும் முன்பாக நிகழ்தது(1991).சூரியக் கதிர் நடவடிக்கைக்குப் பின்பான யாழ் இடப்பெயர்வைக் குறித்துப் பற்பல ஒப்பாரிகள்,பரப்புரைகள் இடம்பெற்றளவுக்குத் தீவக இடப்பெயர்வு முக்கியம் பெறவில்லை.தீவகத்தில் வாழ்ந்த நாற்பதினாயிரம் மக்களும் தமது வாழ்விடங்களை-வளங்களைவிட்டு அகதியாகி இடம்பெயர்ந்த வலியானது சொல்லித் தீரக்கூடியதல்ல!

 

1996 இல் இடம் பெற்ற வலிகாமம் இடப்பெயர்வை"வலிகாமத்தின் முற்றத்திலிருந்து எம்மைக் குடியெழுப்பிக் கலைத்த…"(சூரியக்கதிர்,புலிகளின் வெளியீடு-பக்கம்:12.)என்று மிகவும் உணர்வு ப+ர்வமாகக் கருத்தாடுகின்ற புலிகளின் பரப்புரைகள் இந்தத் தீவின் இடப் பெயர்வைக் குண்டி மண்ணைத் தட்டியது போல"தீவுப்பகுதி எமக்கு கேந்திர முக்கியமற்ற பகுதி"என்றார்கள்.இவர்கள் தமது வளங்களைத் இந்தத் தீவுக்கூட்டங்களுடாகப் பெற்றுவிட்டு,அந்த மக்களை அம்போவென்று தவிக்கவிட்டுத் தமது வளங்களோடு ஓடித் தப்பியபோது, தீவுப்பகுதி மக்களின் அவலம் தொடர்கதையாகியது.கையில் கிடைத்ததோடு உயிரைக் கையில் பிடித்தபடி எனது உறவுகள் யாழ் மண்ணை நோக்கி அராலித்துறைய+டாக நடந்து-தரவைக்கடலைக் கடக்கும்போது, இராணவத்தால் கொன்றழிக்கப்பட்டுத் தப்பியவர்கள் யாழ் பெரு நகரில் தெருவெங்கும் அலைந்தார்கள்.

 

இந்த மக்களின் மண்ணில் விளைந்து கிடந்தவற்றை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்தவன் இன்று மந்திரியாகச் சிங்களப் பாராளுமன்றத்தில் இருக்கிறான்!தீவுப்பகுதி மக்களின் புகையிலையையும்,மிளகாயையும்,வெங்காயத்தையும் அவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துப் பாரிய பெட்டிகளாகச் செய்து, அவற்றை அதற்குளிட்டுக் கொழும்புக்குக் கடத்திப் பெரும் பணத்தைச் சம்பாதித்தான் டக்ளஸ் தேவானந்தா!ஆனால் அந்தப் பயிர்களைத் தமது குருதியால் விளைவித்த மக்களோ யாழ் மண்ணில் நாடோடிகளாக அலைந்தார்கள்-ஒரு சோற்றுப் பருக்கைக்குப் பேயாய் அடிபட்டார்கள்!

 

இந்தச் சோகத்தைச் சொன்னவன் அந்த மண் பெற்றெடுத்த புதல்வன் சு.வில்வரெத்தினம் மட்டுமே!

 

 

"சொல்லித்தானாக வேண்டும்

தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.

சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்

கடலிடைச்சிந்திய துண்டங்களாம்

இத்தீவுகளைக் கவனியாமலேக

கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.

கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.

சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.

சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்

விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்

துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்

வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்

கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்

எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.

ஆயினும்

வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்

வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?

சஞ்சீவி மூலிக்காற்றே வா

வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு

எழுந்து பறந்ததாக வேண்டும்

எம் முந்தைப் புலம் நோக்கி

வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.

இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர

அனுமனும் இங்கில்லை.

இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு

எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக

எழுந்து பறந்தாகத்தான் வேண்டும். "-(19.09.94, காற்றுவழிக்கிராமம் )என்று,எமது வதைகளைச் சொல்வதற்குத் அந்தத் தீவு பெற்றெடுத்த புதல்வனால் மட்டுமே முடிந்தது!

 

 

காற்றடிக்கலாம்,மழை சோவெனக் கொட்டலாம்,மண் விளைவதற்கு மனிதர்கள் இருந்தாக வேண்டும்.அதுபோலவே நாட்டில் அனைத்தும் நிகழலாம்-கிராமத்தில் குடிகளே அழியலாம்.அந்த வலியைச் சொல்வதற்கு அந்த மண்ணில் தப்பியவொரு உயிர் இருந்தேயாகவேண்டும்.எங்கள் மண்ணைப் பாடுவதற்கு இனியாருமில்லை!எங்களிடமிருந்தவொரு பாட்டுக்குயில் பறந்து,காத தூரம் போய்விட்டது.நமக்கென்றொரு வலியிருக்கிறது.அதைக் குறித்துப் பேசுவதற்கு வ.ஐ.ச.ஜெயபாலன்களால் முடிவதில்லை.ஆனாலும் நமது வலியை அதன் உண்மைத் தனத்தோடு சொல்லும் கொரிலாக்களையும் இந்த மண்பெற்றெடுத்துப் பாக்கியம் செய்தே இருக்கிறது.குறைந்த பட்சமாவது நம் வலியைப் பேசிய இந்தச் சு.வி. என்ற தீவுமகன் என் மனத்திலிருந்து நீங்கா அமரனாக நிலைத்தே இருப்பதற்காகக் காற்று வழி எனது கிராமத்தைப் பகிர்ந்து,ஒதுங்கியுள்ளான்.

 

 

"முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்

பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலிஇ

ஆச்சிஇ அப்புஇ அம்மோயென

அன்பொழுகும் குரல்கள்-

ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?

ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?

திகைத்து நின்றது காற்று

தேரடியில் துயின்ற சிறுவன்

திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு

மலங்க விழித்தது போல." -காற்றுவழிக்கிராமம்

 

 

"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பது போல நமது மண்ணை இராணுவத்திடம் பறிகொடுத்துவிட்டு,எங்கள் உறவுகள் நாயாய் அலைந்தபோது,நமது சோகம் சொல்ல எந்தவொரு ஊடகங்களும் முன்வரவில்லை!பெட்டிச் செய்திகளோடு பாம்பாய்ப் படுத்துறங்கிய கொடுமையை நாம் அறிவோம்.புலிகளின் பரப்புரையில் தீவின் இடப்பெயர்வு முக்கியமற்றவொரு விஷயமாகவே இருந்தது! இந்தப் பொழுதில்தாம்

சு.வி. தன் ஆன்மாவை வருத்திப் பாடுகிறான்.

 

 

"நீரறிவீரோ

என் நெஞ்சிலும்

கூடு கட்டி வாழும் குருவிகட்கு வாசலுண்டு

கூடிழந்து போனவரின்

நேசம் விட்டுப் போகாத நெஞ்சகத்தில் சோகமுண்டு

நீரறிய மாட்டீர்.

நீரறிதல் கூடுமெனில்

கோடைவழிப் போக்கில்

குளிர்த்தி வற்றிப்போன எங்கள் வாழ்நிலையின் சோகத்தை

எம்மவரைக் கண்டு இயம்புதல் கூடுமோ?

சற்றெமக்கு இரங்குங்கள்

நாளை நாளையெனக் காத்திருந்த நம்பிக்கை

முளைகருகிப் போகுமுன்னே வரவுண்டோ கேளுங்கள்".-காற்றுவழிக்கிராமம் .

 

 

இங்கேதாம் இந்த ஓரவஞ்சனையைக் கண்டு,கொதித்தெழும் சு.வி.,மக்களின் மனதைத் தனது பாடல்களுக்கூடாகக் காட்டி இந்தவுலகத்திடம் நியாயம் கோருகிறான்.அவன் கண்டடைந்த உண்மையானது,நம்மைக் கருவறுத்த அரசியல் சூழ்ச்சிகள் எங்கள் கிராமத்தையும் மக்களையும் நடாற்றில்விட்டுத் தப்பித்து விட்டதென்பதே!

 

 

இது கொடுமை!

 

 

நம் கிராமத்தின் முதுகெலும்பை உடைத்துத் தேசியம் பேசியவர்கள,; தேடுவாரற்று யாழ் மண்ணில் அலைந்த தீவாரைக் கண்டும் காணாததுபோல அரசியல் செய்தார்கள்.இந்த நல்ல மனிதர்களின் நரித்தனமான விடுதலைப் பண்ணுகள் எல்லாம் வலிகமத்தைச் சுற்றியே வந்தவை.அவை மருந்துக்கும் தீவுப்பகுதியைப் பாடியதில்லை.அந்த மண்ணை முடிந்தளவுக்குத் தமது வளர்ச்சிக்குப் பயன்படுத்திய அமைப்புகளெல்லாம் இறுதியில் அந்த மண்ணை இராணுவத்தோடு சேர்ந்து கொள்ளையடித்துக் கற்பழித்தார்கள்!இது வரலாறு.

 

 

"இன்று மாலையும்

படையினன் ஒருவன் வீசிச்செல்கிறான்

உடைத்தபெட்டகம் ஒன்றின்

ஒடிந்தகாலை.

கிராமதேவதையின் அணிகலன்கள் யாவுமே

களவாடப்பட்டு விட்டன.

ஒற்றைச்சிலம்பும் இவள் உடைமையாயில்லை.

பறிபோயின

பேச்சொலியும்இ கைவளையோசை வீச்சு நடையும்

பிறைநுதற் திலகமும்

அந்நியன் கைப்பட்டழிந்ததெனவாயிற்று.

சந்திவிருட்சங்களின் கீழே

இவளின் இதயஒளிர்வாய விளக்குகள் எரிவதில்லை

குந்தியிருந்தழுகிறாள் குமையும் இருள் நடுவே.

வல்லிருளின் ஆட்சிஇ

வழிப்போக்கிலும் இருள்தான்

வாழ்விடங்கள் எங்கும் இருள்.

பில்லிசூனியத்தில் பீடழிந்தனவாய் மனைகள்

எங்காவது ஓர் இடுக்கிடை

எட்டிப் பார்க்கின்ற ஆவிகள் போல

வாழ்வுறிஞ்சப்பட்ட வற்றல்மனிதர். "-காற்றுவழிக்கிராமம்

 

நம் தீவுமகள் திராணியற்றுக் கிடக்கிறாள்.அவளைத் தினம் புணரும் அந்த மகளின் புதல்வர்களே,அவளின் இன்றைய நிலைக்கும் காரணமானவர்கள்.எனது வீடும்,தோட்டமும்,துரவும் காடாகிவிட்டது.பெரு மரங்கள் வளர்ந்து, அனைத்துப் பகுதியும் காடுகளான பின்பும,; அந்த மண்ணை மறக்க முடியாது தவித்திருக்கும் ஒரு ஆன்மாவை எனது உடல் கொண்டிருக்கிறது.நிலத்தின் அனைத்துப் பரப்புகளிலும் புதைவெடிகள் கொட்டப்பட்டுத் தீவின் எந்தப் பகுதியும் மனித நடமாட்டத்துக்குத் தோதான பகுதியாகவின்றித் திருடர்களின்-காடேறிகளின்-பேய்களின் கூடாரமாக மாற்றப்
hபட்ட பெருங்கொடுமையைச் சொன்ன எங்கள் சு.வி. என்ற தீவின் பாட்டுக் குயில் பாடையில் போனது பற்றி நான் நொந்து கொள்வது,எனது கிராமத்தை எண்ணிக் கொள்வதற்காவும் இருக்கலாம்.

 

 

மனித வாழ்வின் ஒவ்வொரு பக்கமும் போராட்டம் நிகழ்ந்தபடியே இருக்கிறது.அது வாழ்வுக்கும்,வளர்வுக்குமாகப் பற்றிப்படர்ந்து தொடர்கதையாகிறது.இந்தத் தொடர்கதையில் ஒரு பாத்திரத்தைச் சு.வி. ஏற்றிருந்தார்.அவர் மனித வாழ்வின் ஒவ்வொரு திசையையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.தனது மக்களினதும்,ஊரினதும் மகத்துவத்தை வேட்கையாகக் கொண்டு,பாட்டுக் கட்டியவர்.ஒரு கிராமத்தின் அழிவைப் படைப்பாக்கி, அதை அமர இலக்கியமாக்குவது அவரது நோக்காக என்றும் இருந்ததில்லை.மாறாகத் தனது கிரமத்தின் அழுகோலத்தை-அக்கிராமம் கற்பழிக்கப்பட்ட ஈனத்தனத்தை உலகறியச் செய்வதும்,அதற்காக நியாயம் கேட்பதும் அவரது பாரிய மனிதவிருப்பாக இருந்தது.

 

 

 

 

 

அந்த இதயத்தை மீளவும் இயக்குவதற்குப் பாடுபட்ட இந்த மாபெரும் தீவு மைந்தன், தன் அமரகாவியத்தால் மடைதிறந்து என்றும் பேசுகிறான்,அந்தக் கிராமத்தின் நோய்களுக்கு மருந்திடும்படி விண்ணப்பித்தபடி…

 

 

"உற்றதுயர் சொல்லியழ

உரத்துப் பேச

ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்

சிறகொடுக்கி குரலொடுக்கி

சீவியத்தைச்சிறைப்படுத்தி

பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி

கிழிந்துபோன வாழ்வின்

இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்

உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு

குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்

எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்

மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது

ஆயினும்

ஒரு தீக்குச்சி உரசலின்

சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்

காத்திருத்தல் மட்டும் தொடரும்."-காற்றுவழிக்கிராமம்

 

 

எங்களுக்குத் தெரியும் இன்றைய யுத்தங்களின் நோக்கங்கள் என்னவென்று.

 

 

நேற்றைய நிகழ்வுக்கு முந்த நாள் இட்ட தீ காரணமானது.

இன்றைய காட்டுத்தீக்கு நேற்றைய வினை காரணமாகிறது.

இன்றைய சூழ்ச்சி நாளை என்னத்தை எமக்களிக்குமென்பதை நாமறிவோம்!

 

 

எனினும,; நமது வாழ்வின் விருப்புகள் வலியவொரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கானதாகவிருக்குமென்று நாம் பகற்கனவு காண்பதற்கில்லை.

இந்தவிடத்தில்தாம் வெறும் நம்பிக்கை மனித இருப்பின் ஒரு சாட்சியாகப் படர்கிறது.அந்த நம்பிக்கையப் பாடியதுதாம் சு.வி.யின் மகத்தான படைப்பாற்றலாகும்.நம்பிக்கையற்ற எந்த நோக்கமும் வெற்றி பெற்றதல்ல.நம்புவோம் நாம் இன்னும் மனிதர்கள்தாமென.

 

ப.வி.ஸ்ரீரங்கன்

19.12.2006

 

 

 

 

 

 

 

 

 

 

 






















Get free blog up and running in minutes with Blogsome
Theme designed by B A Khan